headlines

img

சின்னக் குருவியும் சின்னப் பொண்ணும்

சின்னச் சின்ன குருவி
சிங்காரக் குருவி 
ஜன்னலோரம் வந்து
கூடு ஒண்ணு கட்டிச்சு 

சின்னப் பொண்ணு ஒருத்தி
சின்னக் கையை நீட்டி
ஜன்னலோரக் கூட்டை
சின்னாபின்ன மாக்கிட்டா

கோபம் கொண்ட குருவி
தாகம் தீரத் தண்ணீரும் 
உண்ண உணவும் கொடுக்க
அன்னை சொன்னாள் அறிவுரை

சின்னப் பொண்ணும் ஜன்னலோரம் 
உண்ண உணவும் தண்ணீரும்
தட்டிலிட்டு அழைத்தது
எட்டிப் பார்தத குருவியங்கே
மனம் மாறி வந்தது
உணவும் நீரும் அருந்தியது
'கீக்கி' என்று இசைத்தது
குருவி சிந்தை மகிழ்ந்தது
சின்னப் பொண்ணு சிரித்தது.

;