headlines

img

பீதியைக் கிளப்பும் வைரஸ்களுக்கான ஆப்பின் முதல் அடி - ஈ.கோலை

சீனாவிலிருந்து புறப்பட்டு பல நாடுகளில் பீதி யைக் கிளப்பிக்கொண்டு மனித உயிர்களைக் குடித்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ்களின் மொத்த கூண்டுக்கும் சரியான ஒரு  ஆப்பு தயாராக்கிக் கொண்டிருக்கிறது. பிப்ரவரி  13-ல் உலக சுகாதார நிறுவனம் அளித்த கணக்கெ டுப்பு, இதுவரை புதிய கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் 46,000 பேர்கள் என்றும் அதில் 1,300 பேர்கள் பூமியிலிருந்து நிரந்தரமாக வெளியேற டிக்கெட் வாங்கிவிட்டார்கள் என்றும் கூறி நம் அடிவயிற்றைக் கலக்க வைத்துள்ளது. 

பிப்ரவரி 26-ம் தேதியில் ACS Journal of  Medicinal Chemistry என்கிற சஞ்சிகை வெளியிட்ட  ஆய்வுக்கட்டுரை இத்தகைய பீதிகளை எதிர்கொள் வதற்கான முதல் படியை எடுத்து வைத்துள்ளது. ஹாங் லியு, ரால்ப் ஹில்ஜென்பெல்ட் மற்றும் பல ஆய்வாளர்கள் இணைந்து கொத்தாக அல்லது கூண்டோடு வைரஸ்களைக் கொள்ளும் வகை வைரஸ் எதிர்ச் சேர்மங்களில் புதியதொன்றைக் கண்டறிந்துள்ளனர். பொதுவாகவே வைரஸ்களின்  பெருக்கத்தை ரெப்ளிகேசன் என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுவார்கள். இத்தகைய கண்டுபிடிப்பின் அச்சாணியாக அத்தகைய ரெப்ளிகேசனில் பயன்ப டக்கூடிய கொரோனா வைரஸ்களுக்கு மெயின் ப்ரோடீயேஸ் என்கிற நொதியும், enterovirus என்கிற குழுமத்தில் 3C ப்ரோடீயேஸ் என்கிற நொதி யும் தத்தமது பெருக்கத்தில் முக்கியப் பங்காற்று கின்றன. 

ஆய்வாளர்கள் கண்டறிந்த ஆல்பா கீட்டோ மைட் என்கிற வேதியச் சேர்மங்களில் ஒன்று மேற்கண்ட இரண்டு நொதிகளிலும் இருக்கும்  துறுதுறுப்பாக இயங்கும் பகுதியான ஆக்டிவ் சைட்டை பிளாக் செய்கின்றன. இதனால் வைரஸ்க ளின் பெருக்கம் மட்டுப்படுத்தப்படுகிறது. இத்த கைய ஆய்வுகளை இன் விட்ரோ என்று சொல்லப்ப டும் சோதனைக் குழாய் அல்லது ஆய்வக அளவில்  தற்போது நிறைவு செய்துள்ளனர். மனிதர்களின் செல்களை பெட்ரி பிளேட்டில் வைத்தும் இத்தகைய சேர்மத்தைச் சோதித்துள்ளனர். அடுத்த கட்டத்தை நோக்கி இந்த ஆய்வானது நகர்ந்துள்ளது. சீனப் பெருஞ்சுவரில் கடைசியாக புதிய கொரோனா வைரஸ்  சறுக்கப் போகிறது. 

;