headlines

img

சாதிவெறி குண்டு..! - தாரைப்பிதா

திரைப்படம்-அறிமுகம்

இரண்டாம் உலகபோரின் கடைசி குண்டு! வெறும் குண்டல்ல; அணுகுண்டு..! அணுகுண்டுமல்ல இந்திய தேசத்தின் முன்னேற்றத்தை அழிக்கவல்லது; புரையோடிப்போய் கிடக்கும் சாதிவெறி குண்டும்தான் என்பதை இதைவிட சிறப்பாக தத்ரூபமாக இதுவரை யாரும் தமிழ்திரையில் தந்தது இல்லை.  தமிழகத்தின் திரைக்களம்... சரியான திசையை நோக்கி பயணத்தை மேற்கொள்ள துவங்கி இருக்கிறது என்றால், அதுமிகையல்ல. 'குண்டு' படத்தின் தயாரிப்பாளர் இயக்குநர் பா.ரஞ்சித், குண்டை அக்கு வேறு ஆணிவேற பிரித்து மேய்ந்து எழுதி இயக்கிய அறிமுக இயக்குநர் அதியன் ஆதிரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அதுபோல் ஆதவன் தீட்சண்யாவையும்தான். இவர்களுக்கு ஒரு ரெட்சல்யூட்..!

மனித சமூகத்திற்கு தேவையான அமைப்புகள் என்றால்... சிவப்பு, நீலம், கருப்பு நிறம் கொண்ட 'தோழர்கள்'தான். தொழிலாளர் சங்கம் என்றால், செங்கொடிதான் என்பதை இதைவிட பொட்டில் அறைந்தாற்போல் எப்படி எளிமையாக கூற முடியும்?  இதுவரை இவ்வளவு பொருத்தமாக அணுகுண்டு ஆபத்தின் உரையாடலை தமிழ் சினிமாவில் யாரும் யையாண்டதில்லை. ஒவ்வொரு தமிழரும், ஏன் ஒவ்வொரு இந்தியரும் அவசியம் பார்த்து ஆதரிக்க வேண்டிய அற்புதமான படைப்பு 'இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு'.

லாரி ஓட்டுனராக தினேஷ், சாதி கட்டுகளை உடைத்தெறிந்து சீறிவரும் புதுமை பெண்ணாக ஆனந்தி, லாரி கிளீனராக முனிஷ்காந்த், புரட்சி பெண் தோழராக ரித்விகா ஆண் தோழராக ஆதவன் தீட்சண்யா என அனைத்து கலைஞர்களும் நடிக்கவில்லை. வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள்.  டென்மா பின்னணி இசை பிரமாதம்; ‘நிலம் எல்லாம்’, ‘மாவளி’ உள்ளிட்ட பாடலும்தான். கிஷோர் ஒலிப்பதிவு, செல்வா எடிட்டிங் உள்ளிட்டு தொழில்நுட்ப வல்லுநர்களும் மிக சிறப்பாக பணியாற்றி இருக்கிறார்கள்.  தெருக்கூத்து பாடல், விழா, குண்டை சாமியாக வைத்து பூஜை, அனிமேஷன் திரை காட்சிகள்... என ஒவ்வொரு காட்சியும் விறுவிறுப்பு குறையாமல், அதேசமயத்தில் திகிலும், திரில்லும், திருப்பமும் காண நிறைந்து கிடக்கிறது.

;