headlines

img

அருகிருந்தோரின் வித்தியாசமான அனுபவம் பேசும் நூல் - சிவகுரு

பொதுவாக நூல் அறிமுகம்  செய்வது நமது வாசிப்பை விரிவு படுத்த உதவும். புது நூல்கள் நம் கண்ணில் படும்போது அதன் தலைப்புகளே அதை வாங்குவதற்கு கானதா என்பதை தீர்மானிக்கும். ஆனால் சில படைப்புக்கள் தலைப்புக்களாக மட்டு மல்லாமல், அதன் தேவைக்காகவே வாங்கிட வைக்கும். அப்படியான ஒரு புத்தகத்தை தஞ்சையில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டின் போது வாங்கி னேன்.  ஒரு நூல் அறிமுகம் செய்யும் போது அதன் உள்ளடக்கம், மொழி நேர்த்தி, அது சொல்ல வரும் விசயம், நடை, வாசகனை பயணிக்க வைக்கும் பாங்கு என பலவற்றையெல்லாம் சொல்வது வழக்கம். இந்த புத்தகம் சற்று வித்தி யாசமானது. இது நூல் அறிமுகம் அல்ல.ஒரு ஆளுமையின் அறிமுகம். முழு புரிதல், அறிவுத் திறன், புத்தி கூர்மை, தன்னலமற்ற உழைப்பு,விடுதலை,சமூக ஞானம் என சகல தளங்களிலும் ஒரு மாமனிதனைப் பற்றி பலர் அனுபவத்தை எழுத்தாக்கிய நூல்….

240 பக்கங்கள் கொண்ட இந்த நூல் ஒரு மிகப்பெரிய ஆளுமையை மட்டுமல்ல இந்திய சமூகத்தின் உண்மை நிலையை முழு உருவத்தோடு காட்டுகிறது என்று சொன்னால் மிகையாகாது.  பாபாசாகேப் அம்பேத்கரோடு நெருங்கிப் பழகிய 22 முக்கிய நபர்கள் தங்களின் அனுப வங்களை  பதிவு செய்துள்ளனர்.  அம்பேத்கரோடு மிக நெருங்கிப் பழகிய சலிம் யுசுப்ஜி இந்த நூலைத் தொகுத்துள்ளார்.  அம்பேத்கரின் பல நூல்களை மும்பையில் உள்ள தேக்கர்ஸ் பதிப்பகம் தான் வெளியிட்டது . அதன் பதிப்பக நிர்வாக பிரிவில் இருந்த திரு யு.ஆர். ராவ் தன் அனுபவங்களைப் பின்வரு மாறு பகிர்கிறார்..

பாகிஸ்தான் குறித்த தன் பார்வையை முன்வைத்து அம்பேத்கர் ஒரு நூல் எழுதுகிறார். பொதுவாக புத்தகங்களின் பின் அட்டைகளில் நூலாசிரியரின் திறமை, எழுதும் பொருள் குறித்த பார்வை, அதன் ஆழம், அவர்  எழுதி யுள்ள விசயம் குறித்த சார்பு என அனைத்தும் அச்சாகும். பாகிஸ்தான் குறித்த அந்நூலில் சார்பு அதிகமாக இருந்ததாக கருதிய திரு ராவ் நிர்வாகத்தின் ஒப்புதலோடு அதில் சில திருத்தங்களை செய்கிறார். அச்சுக்கு செல்லும் முன் நூலை எழுதியவர் கடை சியாக பார்ப்பது வழக்கம் . அப்படி பார்க்கும் போது திருத்தங்கள் செய்தது பாபாசாகேபுக்கு தெரிகிறது. ஏன் செய்யப்பட்டது என கேட்கிறார்.  அதற்கு உரிய விளக்கத்தை திரு ராவ் அளித்த வுடன், அதில் இருக்கும் நியாயத்தை ஏற்றுக் கொண்டு ஒப்பு கொள்கிறார்.  யோசித்து பாருங்கள். ஒரு மிக பெரிய ஆளுமை எவ்வளவு தன்னடகத்தோடு தன் எழுத்தை, தன்னை பற்றிய மதிப்பீட்டை மாற்றிக் கொண்டு இயல்பாக இருந்துள்ளது ஆசரியம் அல்லவா?  அடுத்து மகாத்மா காந்தியும், காங்கிரஸ் கட்சியும் தீண்டக்தக்கா தோருக்கு செய்தது என்ன? எனும் மிக  முக்கிய ஆவணத்தை தயாரித்து வெளி யிட்டார்… இதை பற்றி ஏராளமான விமர்சனங்களும், அவதூறுகளும் வரும் என தெரிந்தே எழுதினார். அதே போல வந்தது அவர் சற்றும் பின்வாங்க வில்லை.  உறுதியோடு நின்றார். பல வெளிநாடுகளுக்கும் குறிப்பாக ஆங்கி லேயர்களுக்கு அதை அனுப்பிவைத்தார். 

சமூக விடுதலை போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய மீனாம்பாள் சிவராஜ் தன் நினைவலைகளில் இவ்வாறு எழுதுகிறார். பட்டியலினத்து பெண்கள் அதிலும் குறிப்பாக படித்த பெண்களை கண்டால் பெரு மகிழ்ச்சி கொள்வார். கல்வி தான் உயர்வை தரும் எனும் கருத்தாக்கத்தோடு உள்ள ஒருவர் அப்படியான பெண்களை சந்தித்தால் நேரம் போவதே தெரியாமல் உரையாடி மகிழ்வார். சென்னையில் நடைபெற்ற ஒரு  கூட்டத்தில் தென் இந்தியாவில் ஒடுக்கப்பட்ட பெண்கள் பல தளங்களில் தடைகளை தாண்டி முன்னேறி இருப்ப தைக் கண்டு பூரிப்படைந்து பாராட்டுக்களை சொன்னார். பெண்கள் முன்னேறுவதை சமூகப் பணிகளில் ஈடுபடுவதை உளப்பூர்வமாக ஏற்று கொண்டார்.  மகாராஷ்ட்ரா சட்ட பேரவை தேர்தலில் அவருடன் சேர்ந்து வெற்றி பெற்ற திரு.டி.பி.ஜாதவ் பாபாசாகேப் உடன் கழித்த அனுபவங்களில் இவ்வாறு சொல்கிறார். 

திரு டி.பி ஜாதவ் சட்ட பேரவைக்கு தேர்வான பிறகும் கூட சட்டப் படிப்பை தொடர்ந்தார். அதற்குக் காரணமும் பாபாசாகேப் தான். அவர் சட்டப் படிப்பை துவங்கிய போது என்ன புத்தகங்களை படிக்க வேண்டும் எனும் பெரும் பட்டியலை கொடுத்தார். வாங்கினேன். அப்போது சொன்னார்…எனக்கு ஒரு எண்ணம் உண்டு. ஒவ்வொரு தனி நபரும் தன் வருமானத்திலிருந்து பத்து விழுக்காடு புத்தகங்களுக்காக செலவிட வேண்டும். அதுவே அறிவார்ந்த சமூகம் உருவாக அடித்தளமாக அமையும்.   தடுமாற்றமே இல்லாத கொள்கை கொண்டவர் அண்ணல். …1950ல் சென்னை யில் பார்ப்பனரல்லோதார் கூட்டத்தைப் பெரியார் நடத்தினார். அதில் சிறப்பு விருந்தினராக அண்ணல் கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் பகவத்கீதை குறித்த தன்னுடைய விமர்சன கருத்துக்களை பாபாசாகேப் பேசினார். அடுத்த நாள் அதுவே அனைத்து நாளிதழ்களிலும் தலைப்பு செய்தியாக மாறியது. ஏராளமான விமர்சனங்கள் எழுந்தது. பெரும் விவாதமும் சர்ச்சை யும் உருவானது.  இதை தொடர்ந்து 1950 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் நாள் பிர்லா குடும்பத்தை சேர்ந்த ஜூகல் கிஷோர் பிர்லா அண்ணல் அவர்களை சந்தித்தார். கீதை குறித்து பாபாசாகேப் பேசியது பற்றி பேசிவிட்டு அவ்வாறு பேசியதை திரும்ப பெற வேண்டும் என கேட்டு கொண்டார்.  ஆனால் கீதை சமூக பிரிவினையை போதிக்கும் நூல்…மனிதர்களுக்குள் ஏற்ற தாழ்வை திட்டமிட்டு பரப்பும் ஒரு கட்டு கதை என தன் தரப்பு நியாய ங்களை எடுத்துரைத்தார்.  இப்படி பல சம்பவங்கள் இந்த நூலில் உள்ளது. நமது சமகாலத்தில் வாழ்ந்து மறைந்த ஒரு மாபெரும் புரட்சியாளரை நாம் இன்னும் ஆழமாக படித்தல் அவசி யம்.அவரின் பல்வேறு பரிமாணங்களை புரிந்து கொள்ள இந்த புத்தகம் பேருதவி யாக அமையும்.  இப்படி இந்த நூலில் ஏராளமான தரவுகள். மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது என்பதை ஒரு இடத்தில் கூட சொல்லி விட முடியாது.அவ்வளவு நேர்த்தி. சொற் சேர்க்கை. எளிய நடை. வாசகன் அன்னியமாகி விடக்கூடாது எனும் அக்கறை. தோழர் பிரேமா ரேவதிக்குப் பாராட்டு. 

பாபாசாகேப் அருகிலிருந்து…
தொகுப்பாசிரியர்: சலிம் யுசுப்ஜி
தமிழில்: பிரேமா ரேவதி
வெளியீடு: மைத்ரி புக்ஸ் 
பக்: 240 விலை: ரூ.200/- 

 

;