headlines

img

பாடல்- இப்படி ஆவேன்!

ஆண்:    நடந்து நடந்து நான் நதிஆவேன்.
    வளர்ந்து வளர்ந்து நான் வான்ஆவேன்.
    இப்படி ஆவேன் என்றா லும்உனை
    நினைத்து நினைத்து நான் நீஆவேன்!
பெண்:    குழைந்து குழைந்து நான் கொடிஆவேன்.
    சிதைந்து சிதைந்து நான் சிலை ஆவேன்.
    இப்படி ஆவேன் என்றா லும்நான்
    கனிந்து கனிந்து உன் கனி ஆவேன்!
                                                  (நடந்து)
ஆ:    மழலை யாக நீதவழ
     மரகதப் பச்சைப் புல்வெளி ஆவேன்!
பெ:    மருந்தாய் எனக்கு நீ இருந்தால்
    நோயாய்க் கூட நானே ஆவேன்!
ஆ:    உன் இதழில்... புன்னகை ஆவேன்
பெ:    உன் சிரசில்... ஒளிவட்டம் ஆவேன்.
ஆ:    உன்கண் ணுக்கு கண்ணாவேன்.
பெ:    மறுத்தால் நீ எனை
    வெறுத்தால் நான்வெறும் மண்ணாவேன்!
     (நடந்து)
பெ:    உன்வாழ் வில்ஒரு துயர் வந்தால்
    உன்கண் ணில்நான் கண்ணீர் ஆவேன்
ஆ:    உன்தோல் விகளால் நீதுவண்டால்
    ஓய்வாய் சாய தோளாய் ஆவேன்.
பெ:    வெற்றியிலே...உனதுவில் ஆவேன்.
ஆ:    வீழ்ச்சியிலே...ஆறுதல் ஆவேன்.
பெ:    உன்சுமை தாங்கிக் கல்ஆவேன்.
ஆ:    உன்இரு இதழில்
    ஒருஇத ழாய் நான் உருவாவேன்!
                                                  (நடந்து)
பெ:    தெய்வம் எனநீ எனைத்துதித்தால்
    திருநீ றாய்உன் நெற்றியில் ஆவேன்
ஆ:    பக்தன் எனநீ எனை நினைத்தால்
    பாசுரம் ஆயிர மாய்நான் ஆவேன்.
பெ:    உன் நினைவால்... நெருப்பாய் ஆவேன்
ஆ:    உன் குதிகால்... செருப்பாய் ஆவேன்
பெ:    உன் தூண் டில் அதில் புழுஆவேன்.
ஆ:    என்தூண் டில்புழு 
    நீஎனில் நானே மீனாவேன்!
                                                  (நடந்து)

;