headlines

img

சிரசில் கத்தி - நவகவி

பாடல்

ஆப்பிள் எல்லாம் கொப்புளக்கட்டியாய்
அன்னை காஷ்மீர் மண் மேலே.
          தாழ்ப்பாள் போட்டுத் தடுக்க முடியுமோ
           கண்ணீர்ப் பெருமூச்சை.... அது
கார்முகிலாக விண் மேலே.
(ஆப்பிள்)
தால் ஏ ரியிலே உறைபனியா?
ஜில்லிடும் சவத்தின் உறைநிலையா?
         சிகரம் சிரச்சேதம்.
குண்டுகள் கொண்டு தாய் நிலத்தை
குதறும் வெறியை “முத்தமிட்டோம்”
         என்குது திரிசூலம்.
               காஷ்மீரின் கன்னத்தில்
               ரோஜாவின் சிவப்பேது?
               ரணமான அவள் முகத்தில்
               ரத்தம் தான் இப்போது.
ரவைதுளைத்த கிழிசல்துணி அவளின் முக்காடு.
ஆப்பிள்)
அழகுப் பூமி நிலைகுலைந்து,
அழுகல் பூமி என இழிந்து,
         கதறிடச் செய்பவரே!
சிரசின் அழுகல் பாதம்வரை
சென்னையைத் தாண்டி குமரிவரை
         படர்ந்திட வைப்பவரே!
               கோட்சேவின் வீடுஅதன்
               புழக்கடையை போல்எமது
               நாடுஇதை மாற்றிவிட
               காணுகிறீர் கொடுங்கனவு.
வெறிநாயை குளிப்பாட்டி தந்தோ மே உணவு!
(ஆப்பிள்)
ரோஜா வில்தேன் ததும்பவில்லை.
கண்ணீர் ததும்பும் காலநிலை.   
         தேச விளிம்பில் தீ!
சங்கிகள் செய்யும் துன்மார்க்கம்.
சாட்டை வீசியா சன்மார்க்கம்?
         குழல் ஆ(கு) மோ லத்தி?
                 தாய் நாட்டை குப்பைஎன
                 மாற்றிவிட்ட கெடுபுத்தி.
                 என்றாலும் மதஇணக்கம்
                 குப்பையிலே குருக்கத்தி.
இன்றோநம் தாய்சிரசில் செருகிவிட் டார்கத்தி.
(ஆப்பிள்)

;