headlines

img

இல்வாழ்க்கை- கோவி.பால.முருகு

பெற்றோர், துணைவி, பிள்ளைகள் தன்னைப்
பேணிக் காத்தலே பேறுடைஇல்லறம்!
துறந்தவர், வறியவர்,பாதுகாப் பிலார்க்குத்
  துணையாய் இருக்கத்துணிவதேநல்லறம்!

வாழ்ந்து மறைந்தவர், வாழ்வாங்கு வாழ்பவர்,
  விருந்து போற்றல்,சுற்றம்பேணல்
பழிக்கு அஞ்சாப் பழிபொருள் நீக்கிப்
  பழிபட சேர்க்காப்பொருள்பகுத்துண்க!

அன்பும் அறனும் உடையவன் வாழ்வில் 
    அணியாய் விளங்கிடும் பண்பும் பயனும்!
அன்பொடுஅறநெறி வாழ்வில் செலுத்தின்
   அதைவிடப்பெறிதிலை வேறெப் பயனும்!

அறத்தின் வழியில் வாழ்வோன்முயல்வோன்
  அனைவரை விடவும் ஆற்றலால் உயர்வான்!
அறத்தின் வழியில் தானும்பிறரும்
   அமைந்திட வாழ்வான் தவத்தின் வலியான்!

அறமெனில் இல்லறம் ஒன்றே ஆகும்
  அதுவும் பழியறநடப்பதாலாகும்!!
அறநெறிப் பிறழா வாழ்க்கை வாழு
   அகிலத்தில் தெய்வமதிப்பில் ஆழு!!

அறத்தின் வழியில் இல்லறம் நடத்து
  அதிலே வாழ்வைச் சிறப்பாய் நிறுத்து!
துறந்தவர் வாழ்க்கை உன்னிடம் தோற்கும்
  துவளா இல்லறம்! துலங்கிட நிற்கும்!

;