headlines

img

முலாம் பூசப்படாத சொற்களில் கவிதைகள் - மாபூபி.

அமீர் அப்பாஸ் எழுதிய  “இசைக்கும் நீரோக்கள்’’ கவிதை தொகுப்பை டிஸ்கவரி புக்பேலஸ் வெளியிட்டிருக்கிறது. 52 கவிதை தலைப்புகளையும், இலவச இணைப்பாக சில பக்க சிறு கவிதைகளையும் தாங்கிவந்திரு க்கிறது இந்நூல். கவிதை தொகுப்பின் அட்டைப்படமே கவிதைகளின் உள்ளடக்கத்தை நமக்கு உணர்த்திவிடும். அமீர் அப்பாசின் பெரும்பாலான  கவிதைகள் தரம்கெட்ட அரசியலைப் பகடிசெய்பவையாகவும், முலாம் பூசப்படாத சொற்களால் காத்திர மாக எதிர்வினை செய்பவையாக வும் இருக்கின்றன.

மக்களை நேசிக்கிற, இயற்கையை விரும்புகிற, மனிதத்தை ரசிக்கிற, காதலைக் கொண்டாடுகிற, சாதியைக் குத்திக்கிழிப்பவையாகவே அவரது கவிதைகள் வலம் வருகின்றன. காதலின் பரவசம், தனிமை, விரக்தி, சோகம், ஏக்கம், பரிவு, துரோகம், வன்மம், எழுச்சி, அதிகாரஅன்பு என வாழ்வின் அனைத்து அம்சங்களும் கவிதை களில் பரவி கிடக்கின்றன. “அன்பை மொழிபெயர்க்க முடியாமல் ஆயுதங்களைத் தூக்கி கொண்டு அலைகின்றன மதங்கள்’’. “ஊரும் சேரியும் ஒன்றாகும் காலத்தில் நாம் மீண்டும் காதலிக்க லாம் அன்பே’’

“உடைக்க முடியவில்லை உள்ளத்தில் நீண்டிருக்கும் உத்தப்புரச் சுவர்கள்’’ சாதிய வன்மத்தையும், மதங்க ளின் பெயரல் நடக்கும் வகுப்புவாத மோதல்களையும், மேடைப்பேச்சு க்கள் உரைக்காததை இக்கவிதை கள் உலுக்கிச் சொல்கின்றன. திடீரென அரசியல் பிரவேசம் செய்யவரும் திரை உலக நாயகர்களையும், மக்களின் அடிப்படை உரிமைகளுக்கே செவிசாய்க்காத அரசியல்வாதிகள் செய்யும் ஜனநாயக படுகொலை களையும் “ சமகாலத்தின் ஜனநாய கம் போல் நாவை இழந்து தொங்கு கின்றன ஆராய்ச்சி மணிகள்’’ “அரசியல் அதிகாரத்தின் நிலையாமை குறித்து அசைபோட்டு கொண்டிருக்கின்றன எருமை மாடுகள் இராஜ்யசபை கூடிய இடத்தில்’’ என தனது எள்ளல் மிகுந்த காத்திரமான விமர்சனத்தை வைக்கிறார் அமீர் அப்பாஸ்.

“வேதங்களின் மந்திரச் சொற்களால் சிறைவைக்கப்பட்ட உங்கள் இறைவன் எனக்கு வேண்டாம்’’ “குருபூஜை இப்போது குருதிகள் பூஜையானது’’ “இல்லாத சாமிக்கும், பொல்லாத சாதிக்கும் எப்போதும் தேவைப்படுகிறது / கட்டுப்படுத்த முடியாத/ வெறியூட்டும் கலவரங்கள்’’

கடவுளின் பெயரால் நாடெங்கும் பரவும் இல்லாத கடவுள் பிரச்சார த்தை தனது கடவுள் மறுப்பு கோடரியால் ஒருபோடுபோடுகிறார். நகரவாசி, சமாதிகளாகும் வீடுகள், கிழவியும் சுருக்கும் பையும் போன்ற பல கவிதைகளில் நவீனமய மான இன்றையச் சூழலில் மக்கள் செருக்கு நிறைந்தும் காலாவ தியான மனிதம் குறித்தும், தனிமை யின் தவிப்பு குறித்தும் பதிவு செய்கிறார். ஏகாதிபத்தியம், பொதுவுடமை, உழப்புச் சுரண்டல், அரச வன்முறை, ஆணாதிக்கம், செய்யாத குற்றத்திற்காகத் தண்டனைக்கு ஆளாகும் சாமானியர்கள் ஆகிய வற்றை, “அதிகாரத்திற்கு எதிராக குரல் எழுப்பும் என்னிடம்/ அடங்கிப் போகும்படி அறிவுறுத்துகிறார் முதலாளி”

“எனக்கான விசாரணைக்காலம் முடிவதற்குள் சிலரின் ஆயுள் தண்டனையும் முடிந்திருந்தது’’ என குரல் அற்றவர்களின் குரலாக வும் ஒலிக்கிறார் ஆசிரியர். “தாலியை உருகச்செய்யும் தந்திரம் ஆண்மையின் காலாவ தியாகிப்போன கம்பீரம்” “பெண்கள் குடிக்கும்போது மட்டும் மதுக்குடுவையில் கரை கின்றன மதங்களும் போதனைக ளும்’’

“அம்மாவின் பேரன்பில் வளர்க்க ப்படும் குழந்தைகள் இவ்வுலகை அம்மாவை போல நம்பிக்கை யோடு பார்க்கிறார்கள் இவ்வுலகம் ஒரு தகப்பனின் கடுமையோடு கரி சனங்கள் ஏதுமற்று இருக்கிறது’’ ஆணாதிக்க சமூகம் நடத்தி கொண்டிருக்கும் பத்தாம்பசலி தனத்தை தோலுரித்துக் காட்டு கிறார் அமீர். “கருத்த முலையிலிருந்து வெள்ளை தாய்ப்பாலாக பொழி கிறது மழை’’ மழையற்றுபோனால் உலகும், உடலும் உயிர்ப்பிக்காது என்பதை உணர்த்தும் தொனி சிறப்பு. “பிள்ளைகள் யாவர்க்கும் அம்மாவைப் போன்ற அபூர்வ மான பெண்களின் துணை அதிர்ஷ்ட வசமாகக்கூட வாய்ப்பதேயில்லை’’ என்ற கவிதையில் மனை வியிடத்தில் (தியாகம், அன்பு,கரிசனை) கொண்ட அம்மாவை தேடும் சராசரி ஆணைப் போல சருக்கினாலும் மற்றைய கவிதைகளில் சல்யூட் அடிக்க வைக்கிறார் அமீர் அப்பாஸ்.

இசைக்கும் நீரோக்கள்
ஆசிரியர்: அமீர்அப்பாஸ்
வெளியீடு: 
டிஸ்கவரி புக் பேலஸ்
பக்: 112, விலை: ரூ.100/-

;