headlines

img

குழந்தைகளிடம் பேசிக் கொண்டே இருங்கள்...

“குழலினிது யாழினிது என்பர் தம் மக்கள்
மழலைச்சொல் கேளாதவர்’

- தம் பிள்ளைகளின் மழலைச் சொற்களைக் கேட்டு இன்புறாதவரே குழலிசை இனிது, யாழிசை இனிது என்று சொல்வார்கள் என்று திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ளார். நம் மனதில் எத்தளை சோகங்கள் இருந்தாலும் மழலையின் இனிய சொற்களை கேட்கும் போது அத்தனை சோகங்களையும் மறக் கடிக்கக்கூடிய ஆற்றல் அதற்குத் தான் உண்டு.  மாற்றம் ஒன்றே மாறாதது என்பது போல இன்றைய குழந்தைகளின் அறிவாற்றலும், பேச்சாற்றலும் கடந்த தலைமுறைகளை காட்டிலும் பெருமளவு அதிகரித்திருக்கிறது என்றே சொல்லலாம்.

சென்னை மடிப்பாக்கம் ராக்கேஷ் - ஹேமா தம்பதியினரின் குழந்தை ஆத்மிகா. ஒன்றே முக்கால் வயதுதான் ஆகிறது. எல்கேஜி, யுகேஜி வகுப்பில் படிக்கும் பாடங்களைக் கூட அழகாக தன் மழலை மொழியில் பேசி காண்போரை ஆச்சர்யப்பட வைக்கிறார். தற்போது வரை 29 மாநிலங்களின் தலைநகரங்கள், 25க்கும் மேற்பட்ட தொழில் நிபுணர்களின் பெயர்கள், வார்த்தை கள், சினிமா பாடல் வரிகள், 5 மாநில முதல்வரின் பெயர்கள் உட்பட மிக அழகாக பிஞ்சுக் குரலில் சொல்கிறார் ஆத்மிகா.

பெற்றோர்  ராக்கேஷ்-ஹேமா கூறுகையில், ஆத்மிகா வயிற்றில் 5 மாதமாக இருக்கும் போதே தினமும் அவளுடன் பேசத்தொடங்கினோம். என்ன செய்கிறோம், எங்கெங்கே போகிறோம் என்பதை அவளிடம் சொல்லிக் கொண்டே இருப்போம். அவளும் வயிற்றில் உற்சாகமாக எட்டி உதைத்து கொண்டே ரசித்து கொண்டு இருப்பாள். பாப்பா பிறந்து 6 மாதங்கள் ஆனதும் அவளுக்கு ஒவ்வொன்றாக சொல்லிக் கொடுக்க தொடங்கினோம். அதை அப்படியே திரும்ப சொல்ல தொடங்கினாள். 9 மாதங்களிலேயே சில வார்த்தைகளை பேச தொடங்கினாள். தொடர்ந்து பொம்மைகளையும் புத்தகங்களையும் அறிமுகப்படுத்த தொடங்கினோம். தாத்தாவும், பாட்டியும் தினமும் அவளுக்கு புத்தங்களில் இருக்கும் கதைகளையும் வண்ணங்களையும் சொல்லிக் கொடுக்க, மிக அழகாக கற்றுக் கொள்கிறாள்.

குழந்தைகளிடம் நாம் அதிகம் பேசப் பேச அவர்களும் அதிகம் கற்றுக் கொள்கிறார்கள். எங்கள் வீட்டில் அனைவருமே பாப்பாவிடம் எப்போதும் நிறைய விஷயங்கள் குறித்து ஆடி பாடி  பேசுவோம். இப்போது அவள் அதிகம் கேள்வி கேட்கத் துவங்கி இருக்கிறாள். இதற்காகவே நாங்களும் அதிகம் படிக்க தயாராகி வருகிறோம். எந்த நிலையிலும் நாங்கள் அவளை படி என்று வற்பறுத்துவதில்லை. அவளே புத்தகங்களை எடுத்து தற்போது கதை சொல்ல தொடங்கி இருக்கிறாள் என்கிறார்கள்.

;