headlines

img

டாம்பீகப் படிப்பு

உழைப்பை வெறுக்க வைக்கும் - இந்த
டாம்பீ கப்படிப்பு.
ஏழைக்கு எட்டாமல் - அது
எவரெஸ் டில் இருக்கு.
         காசிருந்தா சிகரம் எட்டிடலாம்
         இல்லாதவன் சுவரில் முட்டிக்கலாம்.
                                               (உழைப்பை)
நகத்தில் அழுக்கில்லாத நாகரி கப் படிப்பு
அகத்தில் அழுக்கை வைக்கும் அதிமே தாவிப்படிப்பு.
         தங்கத் தட்டில் தரப்படும் தவிடு            
         கற்பிக்குது கள்ளம் கபடு.
இது உழைப்பவனாய்- நம்மை
ஆக்கவில்லை
எத்திப் பிழைப்பவனாய் -ஆக்கி
வைக்கும் கலை.
         ஆண்டைக்கு அடிமைகளை உருவாக்கும் ஆலை
         பகட்டாக வச்சானையா பேரு கல்விச் சாலை.
                                               (உழைப்பை)
காசு பணக்காரனுக்கே கல்விபார்கண் திறக்கும்.
கஞ்சி குடிக்கும் நமக்கோநெற்றிக்கண் தான் திறக்கும் .
         எளியோர்க்கு கிடைப்பது சிரமம்
         புது மோஸ்தர் வருணா சிரமம்.
அந்த கான்வென்டு - பணம்
உடையவர்க்கு
அந்த கல்லூரி - ஏது
கடையருக்கு ?
         பிச்சை எடுத்தும் கல்வி கற்கச் சொன்னது கவி நெஞ்சம்.
         கல்வியையே பிச்சையாக்கி போடுறான் ஏதோ கொஞ்சம்!
                                              (உழைப்பை)
குடிபடை களுக்கு இல்லை கோமான்களின் படிப்பு.
அடிப்படை யேகோணல்; கல்வி இங்கு கடைச் சரக்கு.
         அமெரிக்கா போகும் கனவில்
         ஆத்திசூடி படிப்பான் வகுப்பில்
அட இதுதனே - இங்கு
கல்வி முறை
இது வளர்த்த கடா - மார்பில்
பாயும் நிலை
         மேல் நாட்டான் கோட்டுக் கொரு பட்டன் என ஆகும்
         கூச்சமற்ற ஆசை கொள்ளும் படிப்பாளி மோகம்.   
                                                                                           (உழைப்பை)  

;