headlines

img

எளிய வழியில் இலக்கணம்-5 - கோவி.பால.முருகு

தமிழ் அறிவோம்

அன்புக் குழந்தைகளே!
சென்ற  பாடத்தில் மூவசைச்சீர்கள்வரை பார்த்தோம்.
இன்றைக்கு    நாலசைச்சீர்கள் பற்றிப் பார்க்கப் போகிறோம். தேமா, புளிமா, கருவிளம், கூவிளம் இவைகளோடு காய்,கனி சேர்த்து மூவசைச்சீர்களாகிய 
தேமாங்காய்
புளிமாங்காய்
கருவிளங்காய்
கூவிளங்காய்
வந்ததுபோல.இப்போது தேமா, புளிமா, கருவிளம், கூவிளம் இவைகளோடு தண்ணிழல், தண்பூ, நறும்பூ, நறுநிழல் சேர்த்து
தே/மாந்/தண்/ணிழல்- நேர் நேர் நேர் நிரை
புளி/மாந்/தண்/ணிழல்-நிரை நேர் நேர் நிரை
கரு/விளந்/தண்/ணிழல்-நிரை நிரை நேர் நிரை
கூ/விளந்/தண்/ணிழல்-நேர் நிரை நேர் நிரை
என்றும், தண்பூ சேர்த்து

தே/மாந்/தண்/பூ-நேர் நேர் நேர் நேர்
புளி/மாந்/தண்/பூ-நிரை நேர் நேர் நேர்
கரு/விளந்/தண்/பூ-நிரை நிரை நேர் நேர்
கூ/விளந்/தண்/பூ-நேர் நிரை நேர் நேர்
என்றும்.நறும்பூ சேர்த்து

தே/மா/நறும்/பூ-நேர் நேர் நிரை நேர்
புளி/மா/நறும்/பூ-நிரை நேர் நிரை நேர்
கரு/விள/நறும்/பூ-நிரை நிரை நிரை நேர் 
கூ/விள/நறும்/பூ-நேர் நிரை நிரை நேர்
என்றும்.நறுநிழல் சேர்த்து

தே/மா/நறு/நிழல்-நேர் நேர் நிரை நிரை
புளி/மா/நறு/நிழல்-நிரை நேர் நிரை நிரை
கரு/விள/நறு/நிழல்-நிரை நிரை நிரை நிரை
கூ/விள/நறு/நிழல்-நேர் நிரை நிரை நிரை
எனவும் வருவதால் நாலசைச்சீர்கள் பதினாறாகும். பூ என வருவதை காய்ச்சீர் போலவும்,நிழல் என்று முடிவதை கனிச்சீர் போலவும் கொள்ளவேண்டும்.ஆனால் வெண்பாவில்    நாலசைச்சீர்கள்    வராது    .ஆசிரியப்பா,
கலிப்பாவில்     குற்றியலுகரம் வந்தாலொழிய வராது,வஞ்சிப்பாவில் ஓரடியில் ஒரு நாலசைச்சீர் வரும்,சில வரிகளில் இரண்டும் வரலாம்.
நீங்கள் அவசியம் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டியது ஒரசைச்சீர்கள் நான்கு,,ஈரசைச்சீர்கள் நான்கு,மூவசைச்சீர்கள் எட்டு,நாலசைச்சீர்கள் பதினாறு என்பதை.
 இந்தப்பாடத்தில்நாலசைச்சீர்களை மட்டும் பார்த்தோம்.அடுத்த பாடத்தில் சீர் பிரித்தல் குறித்துப் பார்ப்போம்.

;