headlines

img

நெருப்பில் எரிந்த தேவ மலர் - அஜயன்பாலா

அமெரிக்க கவிஞர் மற்றும் நாவலாசிரியர் சில்வியா ப்ளாத் தனது சுய சரிதையான “மணி குடுவை” (the bel jar) என்ற புதினத்தால் உலகளவில் அறியப்பட்டவர். பெண் விடுதலை சார்ந்த சிந்தனைகளை கொண்ட சில்வியாவிற்கு அவர் சார்ந்த சமூகமும், அவர் சந்தித்த காதலும் அத்தனை ஏற்புடையதாக இல்லை. சில்வியா ப்ளாத் 1950ல் ஸ்மித் கல்லூரியில் உதவித்தொகை பெற்று கல்வி பயின்ற காலக்கட்டத்தில் அமெரிக்க சமூகம் முற்போக்கு சிந்தனைகளில் மிகவும் மின் தங்கியதாக இருந்தது. இதனால் சில்வியாவிற்கு சமூகம் கொடுத்த நெருக்கடிகள் தாங்க இயலாததாக இருந்தது. மேலும் அவரது காதல் வாழ்க்கை மிக கசப்பானதொரு அனுபவமாக மனதில் குழப்பங்களை விளைவிக்க ஒருக்கட்டத்தில் மனநிலை பாதிக்கப்பட்டு சில்வியா பிளாத் தன் முகத்தை சமையல் எரிவாயுவில் காண்பித்து தற்கொலைக்கு முயன்றார். அதன்பின் மனநல மருத்துவ சிகிச்சை பெற்று குணமடைந்து மீண்டும் தனது கல்வியை தொடர, 1955 ல் பட்டம் முடித்தார். பின்னர் பிரிட்டிஷ் கவிஞரான டெட் ஹுகஸைச் சந்தித்த சில்வியா அவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவரது திருமண வாழ்வும் தோல்வியிலேயே உச்சக்கட்ட மனச்சிதைவு நோய்க்கு ஆளாக்கியது. இப்படியான தனது உளவியல் சார்ந்த மனக்குழப்பங்களையும், உணர்வுகளையும் அப்படியே “மணிக்குடுவை” என்ற நாவலாக எழுதிவிட்டு, ஆறுமாதம் கழித்து 1963 ஆம் ஆண்டில் மன உளைச்சல் அதிகரித்து தற்கொலை செய்துகொண்டார்.

மணிக்குடுவை ( தி பெல் ஜார்) நாவல் மற்றும் அவரது கவிதைத் தொகுதிகள் கொலோசஸ் மற்றும் ஏரியல் ஆகியவற்றிற்காக மரணத்திற்குப் பிறகு இலக்கியத்திற்காக வழங்கப்படும் உரிய விருதான ப்ளாட் புலிட்சர் 1982 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. மிக உயர்ந்த ஆங்கில நடையில் நிறைய குறியீடுகளும், உண்மை உணர்வுகளின் பிரதிபலிப்பும், ஒரு இளம் பெண்ணின் மனக்குழப்பங்களையும் வெளிப்படையாக எழுதப்பட்ட தி பெல் ஜார் (மணிக்குடுவை) இதுவரை ஆறு உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்நாவலை வெளியிடுவதில் ஒரு பதிப்பாளனாக பெருமகிழ்வு தந்த வி.விஜயபத்மாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி. மூல ஆசரியரின் பித்து மனநிலைக்கு செல்லாமல் இப்படியொரு மொழிபெயர்ப்பு சாத்தியமில்லை. காலதாமதமாக வந்தாலும் தமிழ் மொழிபெயர்ப்பு இலக்கியத்தில் சில்வியா பிளாத்தின் மணிக்குடுவை எனும் சுயசரிதம் மிக முக்கியமான நாவலாக கவனிக்கப்படும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.


சில்வியா விளாத் (மணிக்குடுவை)
தமிழில்: ஜி.விஜயபத்மா
வெளியீடு:  நாதன் பதிப்பகம்
16/10, பாஸ்கர் தெரு, நேரு நகர்,
தசரதபுரம், சாலிகிராமம் 
சென்னை -600 093
பக்:312  விலை ரூ.300/-
தொடர்புக்கு : 98840 60274

;