headlines

img

அரச மர அச்சம் - ஆரூர் புதியவன்

கவிதை

பண்டிகையை
கொள்ளிக்கட்டைப்
பண்டிகையாக்கும்
கொடியோரின் அதிரடிகள்...

சிறுவர்கள் சேர்ந்து
கொண்டாடிய
பண்டிகையை,

வெறுப்பை விதைக்கும்
கலவரக்களமாய்
விலாசம் மாற்றினார்கள்
வியாபாரத்திற்காக
விலாசம் மாறி வந்தவர்கள்...

குட்டிப்பிள்ளைகளின்
குதூகலமாய் இருந்த
பண்டிகை,
இப்போது
வட்டிக்கடைக்காரர்களின்
தொழில் கவசமானது...

துவேச முழக்கங்கள்
அதற்குத்
துணைசெய்யலாகின..

வீதிகளில் 
பீதிகள்...!
வெறிவளர்க்கும்
சேதிகள்...?

அன்று
ஆற்றங்கரையில்
ஆடிய பிள்ளைகள்...
இன்று
அடுப்பங்கரைக்குள்
அஞ்சி ஒளிந்தனர்...!

அரச(?) மரமோ

;