headlines

img

தமிழகத்தில் 6 இடங்களில் தொல்லியல் பயிற்சி வகுப்புகள்

தமிழகத் தொல்லியல் துறை சார்பாக தொல்லியல் ஓர் அறிமுகம் என்ற தலைப்பில் பல்துறை சார்ந்த வரலாற்று ஆர்வலர்களுக்கு ஐந்து நாட்கள் தொல்லியல் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன. தமிழக அரசின் மாநில தொல்லியல் துறை தமிழகம் முழுவ தும்  தொல்லியல் ஆய்வுகளை செய்து வருகிறது. குறிப்பாக  கீழடி ஆய்வினை தற்போது நடத்தி வருவதும் தமிழகத் தொல்லியல் துறையாகும்.

தமிழக தொல்லியல் துறையில் பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ள தற்போதைய தமிழக அரசு, தொல்லியல் மற்றும் வரலாற்று ஆர்வலர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்குத் தொல்லி யல் பயிற்சி வகுப்புகள் மற்றும் கள ஆய்வு பயிற்சிகளை நடத்த உள்ளது. இதனடிப்படையில் பயிற்சி வகுப்புக்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் தமிழக தொல்லியல் துறை வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதிலும் உள்ள பல வரலாற்று ஆர்வலர்கள் இப் பயிற்சி வகுப்பிற்கு விண்ணப்பித்து வருகின்ற னர். 

தொல்லியல், கட்டடக்கலை யியல், நாணயவியல், மரபுச் சின்னங்கள் பாதுகாப்பு, கல்வெட்டி யல் ஆகிய தலைப்புகளின் கீழ் இப்பயிற்சி வகுப்புகளை, சென்னை, தர்மபுரி மதுரை, தஞ்சாவூர்,  கோயம்புத்தூர் திருநெல்வேலி ஆகிய 6 இடங்களில் நடத்த  திட்ட மிடப்பட்டுள்ளது.  இப்பயிற்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள்,  தொழில் வல்லு னர்கள், மற்றும் வரலாறு சாராத பல்வேறு தரப்பினரும் இணை யலாம் என கூறப்பட்டுள்ளது. எனவே வரலாற்றின் மீது ஆர்வம் உள்ள வர்கள் தமிழகத் தொல்லியல் துறை யின் இப்பயிற்சிப் பட்டறையில் சேருவதன் மூலம் தங்களின் வரலாற்று ஆர்வத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல இயலும். விண்ணப்பபடிவத்திற்கான இணையதள முகவரி கீழே உள்ளது.

Website:
https://www.tnarch.gov.in/

;