headlines

img

காட்டில் ஒரு துவக்கப்பள்ளி

ஒரு காட்டில் ஒரு பள்ளிக்கூடம் இருந்தது. அதில் தலைமை ஆசிரியர் சிங்கம் ஆவார். அந்தப் பள்ளிக்கூடத்தின் ஒரு வகுப்பின் வகுப்பாசிரியர் மலைப்பாம்பு. அந்த வகுப்பில் புலிக்குட்டி, யானைக்கன்று, நரிக்குட்டி, பூனை குட்டி, கங்காரு குட்டி, குரங்கு குட்டி என அனைவரும் படித்தார்கள் அந்த வகுப்பில் புலிகுட்டி மட்டும் நன்றாக படிக்கும். யானைகுட்டியும் மற்ற குட்டிகளும், குரங்கு குட்டியும் நரி குட்டியும் செய்யும் சேட்டைகளை பார்த்துக்கொண்டே ஆசிரியர் மலைப்பாம்பு நடத்தும் பாடங்களை கவனிக்காது அப்போது ஒருநாள் பரிட்சை வந்தது.

அதில் புலிக்குட்டி முதலிடம் பெற்றது. தலைமை ஆசிரியர் சிங்கம் புலிக்குட்டியை மிகவும் பாராட்டினார்  இதை பார்த்த யானைக்குட்டி கோபமாக வீட்டிற்குச் சென்றது புலிக்குட்டி யானையை மறித்து "ஏன் யானையே கோபமாக இருக்கிறாய்?"என்றது. அதற்கு யானைக்குட்டி, "எல்லோரும் உன்னை மட்டும் பாராட்டுகிறார்கள். அதனால் நான் இனிமேல் பள்ளிக்கூடத்திற்கு வரமாட்டேன் எனக்கு படிப்பு வரவில்லை"! என்று சொன்னது.

அதற்கு புலிக்குட்டி, "உன்னை ஏன் பாராட்டவில்லை தெரியுமா?  நீ குரங்கும் நரியும் செய்யும் சேட்டையை பார்த்துக்கொண்டு ஆசிரியர் நடத்துகிற பாடங்களை கவனிப்பதில்லை. பாடங்களை கவனித்தால் தான் நன்றாக படிக்கலாம்" என்றது.  அதற்கு யானைக்குட்டி, "நான்தான் ஆசிரியர் நடத்திய பாடங்களை கவனிக்கவில்லையே நான் எப்படி படிக்க முடியும்" என்றது.

அதற்கு புலிக்குட்டி, "நான் கவனித்துள்ளேன். கவனித்த பாடங்களை உனக்கு சொல்லிக்கொடுக்கிறேன். இருவரும் சேர்ந்து படிக்கலாம் என்றது. பின்பு யானை கொஞ்சம் கொஞ்சமாக படித்தது.

பின்பு ஒருநாள் பரிட்சை  வந்தது. அதில் யானைக்குட்டி போன முறை எடுத்த மதிப்பெண்களை விட அதிகமாக எடுத்து தோல்வி அடைந்தது. ஆனால், பின்பு வந்த பரிட்சையில் நல்ல மதிப்பெண் பெற்று வெற்றி அடைந்தது. தலைமையாசிரியர் சிங்கம் வகுப்பிற்கு வந்து யானைக்குட்டியை பாராட்டினார். அதைப் பார்த்த குரங்கு குட்டி, நரிக்குட்டி, ஓநாய் குட்டி, கங்காரு குட்டி என எல்லோரும் இனிமேல் நாங்களும் படிப்போம் என்றார்கள். பின்பு அனைவரும் சேர்ந்து நன்றாக படித்தார்கள். வகுப்பு ஆசிரியரும் தலைமை ஆசிரியரும் எல்லோரையும் பாராட்டினார்கள்.

;