headlines

img

நீர் உரிமை பற்றிப் பேசும் நூல்

சோழநாடு, சங்ககாலம் முதல் ஒரு நெடிய வரலாற்றைக் கொண்டுள்ளது. காவிரியாறு பரவலாக சோழநாடு முழுவதும் தம் கிளையாறுக ளையும், வாய்க்கால்களையும் பரப்பியுள்ள தாலும், திட்டு நிலத்தைக் கூட விட்டு வைக்காமல் மக்கள் வேளாண்மைக்குப் பயன்படுத்தியதாலும், பழங்குடியிருப்பு களையும், வரலாற்றுக்கு முந்தைய காலத் தடயங்களையும் பெற முடியாமல் போயிற்று எனச் சொன்னாலும் பழையாறை, காவிரிபுகும் பட்டினம், திருவெண்காடு போன்ற இடங்களில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள் உட்பட இன்னபிற தொல்லியற் சான்றுகளின் பின்னணியில் பார்த்தோமானால், பல நூற்றாண்டுகளாக இப்பகுதி, மக்கள் வாழும் குடியிருப்புகளைக் கொண்டுள்ளதென அறியலாம். அண்மையில் கண்டியூர் என்ற இடத்தில் கிடைத்த பானைகளும், கற்கோடாரியும் சோழ நாட்டின் வேளாண்மையை சங்க காலத்திற்கும் முன்பாக நகர்த்தும் என்கிற தகவலோடு தொடங்கும் ‘சோழர் அரசும் நீர் உரிமையும்’ என்ற இந்நூலில் இலக்கியச் சான்றுகளாலும் கல்வெட்டுச் சான்றுகளா லும் நூலின் பொருண்மையை நிறுவுகிறது. 

சோழ நாட்டினைப் பொறுத்தவரை கி.பி.894 ஆம் ஆண்டின் ஒரு கல்வெட்டு த்தான் இதுகாறும் கிடைத்தவற்றுள் நீர்உரிமை பற்றிப் பேசும் காலத்தால் முந்தைய சான்றாகும். இதன்படி, பூதி ஆதிச்ச பிடாரியார் என்ற ஒரு வட்டாரத் தலைவரின் மகள் தாம் வாங்கிய நிலத்தினை ஒரு கோயிலுக்குக் கொடையளித்துள்ளார். அந்நிலத்திற்குத் தேவையான நீரினையும் வழங்கியுள்ளார். அந்நீர் உரிமையினை, நீர் பாய்ச்சிக் கொள்வதாகவும் என்ற கல்வெட்டுத் தொடரினால் விளக்கி யுள்ளார். ஆனால் அக்கோயில் நீராதா ரங்களைப் பராமரிக்கும் பணி வரிகளான எச்சோறு, குலைவெட்டி, குரப்பு வெட்டி போன்றவற்றிலிருந்து விலக்களிக்க ப்பட்டுள்ளது. இதனின்றும் பின்வரும் கருத்துகளைப் பெறலாம்.

1. ஆட்சிக் குடும்பத்திலுள்ள பெண்கள் நில உரிமையுடன் நீர் உரிமையும் கொண்டி ருந்தனர். 2. ஆற்றுநீர், ஆட்சியாளர் பிடியி லிருந்தது. 3. குரப்பு வெட்டி, குலைவெட்டி போன்ற பணிவரிகள் முக்கியமானவை. 4.அவ்வரிச்சுமை / பணிச்சுமை பிறர்மேல் சுமத்தப்பட்டிருக்கும். எனவே அப்பணி யினை கொடையாளியோ, அவர் கீழ் பணி யாற்றும் வேலையாளோ செய்ய வேண்டிய தாய் இருக்கும். பின்கூற்றே பெரும்பாலும் சாத்தியப்பட்டிருக்கும்.

சுமார் கி.பி.900இல் மறிஞ்சிகை சதுர்வேதி மங்கலத்தின் மாயவகிரமவித்தன் என்ற தனியார் அதே ஊரிலுள்ள திருமற வன்னீஸ்வரத்து பெருமாள் என்ற கடவுளுக்கு திருநந்தவனம் அமைப்பதற்கு அக்கோயிலின் புன்செய், நன்செய் நிலங்களை சமதளமாக்கியுள்ளார். அதற்காக அத்தனியாருக்குக் மூன்று மாநிலமும் நீரிறைத்து பயிர் செய்யும் உரிமையும் வழங்கப்பட்டது என்ற பதிவும் நீர் உரிமை யின் வகைமைகளை எடுத்துரைக்கிறது.

“சோழர் நாட்டில் நீருரிமை” “சோழர் அரசும் நீர் உரிமையும்” என்ற இரண்டு கட்டுரைகளைக் கொண்ட இந்நூலில் தமிழர் வாழ்வில் நீரின் முக்கியத்துவம் அறிந்து செயல்பட்டதை விளக்குகிறது.  நீர் உரிமை, மேலாண்மை ஆகியவற்றின் சமூகப்படிநிலைகளையும் ஈடுபட்ட இனக்குழுக்களையும் நூலாசிரியர் பட்டிய லிட்டுள்ளார். இந்த நூலுக்கானதுணை நூற்பட்டியலும் கூடுதல் தகவல்களைத் தேடியறிய உதவும். தண்ணீரின் தேவை உணரப்படாததால் அதன் விளைவை அனுபவிக்கும் காலத்தில் இத்தகைய நூல் புதிய வெளிச்சத்தைத் தரும்.

;