headlines

img

தேவை பணி நிரந்தரம்

கொரோனா  உலகையே அச்சுறுத்திக் கொண்டிருந்தபோது அரசு அழைப்பின் பேரில்  செவிலியர்  பயிற்சி முடித்த ஏராளமானோர் தங்க ளது உயிரையும் பொருட்படுத்தாது நாடு முழு வதும் பணியில் சேர்ந்தனர். 

தமிழகத்தில் கொரோனா முதல் கட்டத்தின் போது 3 ஆயிரம் செவிலியர்களும் 2வது கட்டத் தின்போது  ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்க ளும் தற்காலிகமாகப் பணி அமர்த்தப்பட்டனர். இவர்களில் சிலர் வேறு பணி அல்லது தனியார் மருத்துவமனைகளில் சேர்ந்து விட்ட நிலையில்  3 ஆயிரம் பேர் மட்டுமே  தற்போது உள்ளனர். இதில் 2 ஆயிரத்து 400 பேரைத் தரவரிசை அடிப்ப டையில் மாவட்ட அளவில் இணை இயக்குநர் சுகாதார சேவைகள் பிரிவில் பணிக்கு எடுத்துக் கொள்வதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடந்த மார்ச் மாதம்  அறிவித்தி ருந்தார். ஆனால் இன்னும் அந்த பணி கூட வழங்கப்படவில்லை. கொரோனா கால செவிலி யர் பணியை நீட்டிப்பு செய்துள்ள போதிலும் கடந்த 5 மாதங்களாக அதற்கான ஊதியமும் வழங்கப்படவில்லை.

கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலி யர்களைத் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்துவதற்கான ஒப்புதல் கேட்டு நிதியமைச்சகத்திற்கு மருத்துவ சேவைகள் பிரிவு இயக்குநரகம் கோப்பு அனுப்பி யுள்ளது. ஆனால் இன்று வரை நிதியமைச்சகத்தி டமிருந்து அதற்கான பதில் வரவில்லை. இவர்க ளைப் போன்றே பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா கால செவிலியர்கள் பணி உத்தரவா தமின்றி அவதிப்படுகின்றனர். கொரோனா காலத்தின்போது 8 மணிநேரத்திற்கும் அதிக மாகக் கவச உடையைக் கூட அகற்றமுடியாமல் நேரத்திற்குச் சாப்பிட முடியாமல் தடுப்பூசி கண்டுபிடிக்காத காலகட்டத்தில் நோயாளிக ளைக் காப்பாற்றவேண்டும் என்று உன்னதமான நோக்கத்தில்  மருத்துவர்களும் செவிலியர்களும் பணியாற்றினர்.  இப்படி நியமிக்கப்பட்ட பல மருத்து வர்களின் நியமனம்  கடந்த மார்ச் மாதத்திற்குப் பின்னர் புதுப்பிக்கப்படவில்லை.

அகில இந்திய அளவில் தமிழகம் மருத்து வத்துறையில் முன்னணியில் இருப்பதற்கு வலுவான அரசு மருத்துவ கட்டமைப்புகளே காரணம். எனவே இந்த கட்டமைப்பு ஏற்படுவ தற்குக் காரணம் மருத்துவர்கள் மற்றும் செவிலி யர்களின் அயராத பணி என்பதை மறுக்கமுடி யாது. அனைத்து துறைகளிலும் நிரந்தர ஊழி யர்களை நியமிக்கும் நடைமுறை கைவிடப்பட்டு ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்துவதை அரசு கடைப்பிடிப்பதைத் தவிர்க்கவேண்டும். 

நோயாளியின் உயிர் சம்பந்தப்பட்ட துறை சுகாதாரத்துறை என்பதால் இந்தத்துறையில் நியமனங்கள் முறைப்படி நடைபெறவேண்டும். முறைப்படி வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு மற்றும் கொரோனா கால பணி ஆகிய வற்றுக்கு முக்கியத்துவம் அளித்து மருத்துவர்க ளையும் செவிலியர்களையும் நிரந்தரமான பணியில் அமர்த்த வேண்டும்.

;