headlines

img

போராட்டங்களுக்கு ஆதரவான நீதியின் குரல்...

மாற்றுக் கருத்தை முன்வைத்து மக்கள்நடத்தும் போராட்டம் உங்களுக்கு பயங்கரவாதமாக தெரிகிறதா ? என்று மோடி தலைமையிலான ஒன்றிய அரசை தில்லி உயர் நீதிமன்றம் கடுமையாகசாடியிருக்கிறது. இந்தியாவில் ஜனநாயகம் கொஞ்சம்கொஞ்சமாக திட்டமிட்டு  சிதைக்கப்பட்டு வரும் நிலையில் தில்லி உயர்நீதி மன்றத்தின் இந்த கருத்து மிகவும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

‘’மக்களுக்கு போராட்டம் நடத்தும் தார்மீக உரிமையை அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது. தங்களுடன் கருத்து வேறுபாடு கொண்டவர்களை அடக்குவது வலுப்பெற்றால், அதுதான் ஜனநாயகத்தின் கருப்பு நாளாகும். பயங்கரவாத செயல்களுக்கு எதிரான உபா சட்டத்தை சாதாரணகுற்றச் செயல்களுக்கு எல்லாம் பயன்படுத்துவது சரியான போக்கு அல்ல” என்று நீதிபதிகள் கண்டித்திருக்கின்றனர். மேலும் கைது செய்யப்பட்ட மாணவர்களை ஜாமீனில் விடவும் உத்தரவிட்டனர். ஆனாலும் அமித்ஷாவின் காவல்துறை முகவரியை நேரில் ஆய்வு செய்ய  வேண்டும் என இதுவரை விடுவிக்காமல்  தரம் தாழ்ந்த சூழ்ச்சியில் இறங்கியிருக்கிறது.

ஆனால் மறுபுறம், தில்லியில் வெளிப்படையாக மதக்கலவரத்தை தூண்டிய பாஜக தலைவர் கபில்மிஸ்ரா, அனுராக்தாக்கூர் இதுவரை கைது செய்யப்படவில்லை. ஏன் தில்லி ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் காவல்துறையின் உதவியுடன் சென்று மாணவர்களை தாக்கிய ஆர்எஸ்எஸ் மற்றும் ஏபிவிபி ரவுடி கும்பல் மீது இதுவரை வழக்குகூட பதிவு செய்யப்படவில்லை.   ஆனால், கடந்த சில தினங்களுக்கு முன்புதான் ஜி 7 உச்சி மாநாட்டில்  பிரதமர் மோடி பேசிய போது,ஜனநாயகமும், சுதந்திரமும் இந்திய நாகரிகத்தின்பாரம்பரிய விழும்பியங்கள் என கூறியிருக்கிறார்.அதே மாநாட்டில், இணையத்தை முடக்குவதுஜனநாயக விரோத செயல் எனும் கூட்டறிக்கையிலும் இந்தியா கையெழுத்திட்டிருக்கிறது. ஆனால்இந்தியாவில் உண்மையில் நடப்பது என்ன?  இணையதள முடக்கத்தில்  இந்தியாவிற்கே முதலிடம். 2014க்கு பின்னர் அரசை விமர்சிப்பவர்கள் மீதான  தேச துரோக வழக்கு  96 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது.

புதியதாக பதிவு செய்யப்பட்டுள்ள 2301உபா வழக்குகளில் விசாரணையின்றி அனைவரும்சிறையிலேயே இருக்கின்றனர். சமூக செயற்பாட்டாளர் சுதாபரத்வாஜ் கைது செய்யப்பட்டு 1000 நாட்களை கடந்த நிலையிலும் விசாரணையே இல்லை.பீமா கொரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் 2 ஆண்டுகளாக எந்தவித விசாரணையும்இல்லாமல் சிறைகளில் உள்ளனர். உயர் தொழில்நுட்பம் பயன்படுத்தி அவர்களுக்கு எதிராக பொய்சாட்சியங்கள் அவர்களது கணினிகளில் திணித்தனர் என்பது நிரூபிக்கப்பட்ட பின்னரும் அவர்கள்விடுதலை செய்யப்படவில்லை. ஏற்கனவே, உத்தரப்பிரதேச பாஜக யோகி அரசு தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் போடப்பட்ட 120 வழக்குகளில் 94-ஐ அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து கடுமையாக சாடியிருந்தது.  ஜனநாயக குறியீடு பட்டியலில் 2014 ல் இந்தியா 27வது இடத்தில் இருந்தது. தற்போது  57 வது இடத்திற்குதள்ளப்பட்டிருக்கிறது. இந்திய ஜனநாயகத்தையும், அரசியல் சாசனத்தையும் பாதுகாக்க ஒன்றிய மோடி அரசின் எதேச்சதிகாரத்தை முறியடித்திட  அனைவரும் ஒன்றிணைந்து முன்வர வேண்டும்.

;