headlines

img

துயரின் பிடியில் சிறு, குறு, நடுத்தர தொழில்கள்...  

2021ஆம் ஆண்டின் மிக முக்கியமான சவால் இந்தியாவின் சிறு, குறு, நடுத்தர தொழில்களின் மீட்சி பற்றியதுதான். நரேந்திர மோடி அரசின் மோசமான கொள்கைகள் காரணமாக ஏற்கெனவே துயரத்தின் பிடியில் சிக்கியிருந்த சிறு, குறு, நடுத்தர தொழில்கள், கொரோனா ஊரடங்கு காலத்தில் கிட்டத்தட்ட அழிவு நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டன. கோடிக்கணக்கான மக்கள் வேலையிழந்து வீதிக்கு தள்ளப்பட்டனர். இந்நிலையில் சிறு, குறு, நடுத்தரதொழில்களை பாதுகாப்பதாகக் கூறி சில திட்டங்களை மத்திய அரசு அறிவித்தது. குறிப்பாகஇத்துறைக்காக ரூ.3லட்சம் கோடி அவசரகால நிதி ஒதுக்கப்படுவதாக மோடி அரசு வாய்ப்பந்தல் போட்டது. அதுமட்டுமல்ல, மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, எம்எஸ்எம்இ சமாதான், ஆத்ம நிர்பார் பாரத் என்ற பெயர்களில் புதிதுபுதிதாக நிதி உதவித் திட்டங்களும் கூட அறிவிக்கப்பட்டன. 10 மாதங்கள் கழித்து உண்மை என்னஎன்று கணக்கெடுத்துப் பார்த்தால் 68 சதவீத சிறு-குறு நடுத்தர தொழில்முனைவோர், மேற்கண்டவாய்ப்பந்தல் திட்டங்களில் எந்த வொரு நிதிஉதவியையும் பெறவில்லை என்று  அதிர்ச்சிகரமான உண்மையை தெரிவித்திருக்கிறார்கள்.

லோக்கல் சர்க்கிள்ஸ் என்ற அமைப்பின் சார்பில் நாடு முழுவதும் சிறு, குறு, நடுத்தர தொழில்முனைவோரிடம் நடத்தப்பட்ட கருத்தாய்வில், ஜிஎஸ்டியால் ஏற்கெனவே மூடும் நிலைக்கு வந்துவிட்ட சிறு, குறு, நடுத்தர தொழில்கள் ஊரடங்கு காலத்தில் மூடப்பட்டே விட்டன என்ற தகவல்கள்தான் மிஞ்சின. ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு ஒன்றுமுதல் மூன்று மாத காலம் வரை சமாளித்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இருந்த 27 சதவீத சிறு, குறு, நடுத்தர தொழில்கள், திட்டமிடப்படாத ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டதன் விளைவாக மூடுவிழா கண்டுவிட்டன என்று அந்தஆய்வு தெரிவிக்கிறது. ஏற்கெனவே வங்கிகளில் கடன் வாங்கியிருந்த ஓரளவு பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமே மத்திய அரசுஅறிவித்த திட்டங்களின்கீழ் நிதி கிடைக்கப் பெற்றது;

முற்றிலும் கைத்தொழிலாக, குடும்பத் தொழிலாக, சிற்சில தொழிலாளர்களை மட்டுமே வேலையில் அமர்த்தி உற்பத்தி செய்து வந்த அனைத்து சிறு, குறு உற்பத்திக் கூடங்களும் மூடப்பட்டுவிட்டன என்பதே உண்மை.அரசின் திட்டங்கள் மூலமாக வெறும் 21 சதவீத நிறுவனங்களே பலன்பெற்றதாகக் கூறியுள்ளனர். 44சதவீத நிறுவனங்கள், வேலையில் அமர்த்தியிருந்தவர்களை றுத்திவிட்டதாகவும், 2021ல் நிலைமை சீரடைந்தால் சிலரை திரும்ப வேலைக்கு அழைத்துக் கொள்ள முடிவு செய்திருப்பதாகவும் கூறியுள்ளன. 46 சதவீதசிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள், வேலையிலிருந்துநிறுத்தியவர்களை திரும்ப அழைக்கும் எண்ணமோ வாய்ப்போ இல்லை என்று கூறியுள்ளன. 2021ல் தங்களது தொழில் சற்று முன்னேறும் என்று கருதுவதாக 45 சதவீத நிறுவனங்கள் கூறியுள்ளன. மாறாக நிலைமை சீரடைவதற்கோ, தங்களது உற்பத்தி மற்றும் விற்பனையில் தேக்கநிலைமாறுவதற்கோ வாய்ப்பு இல்லை என்பதால் மூடுவதைத் தவிர வேறு வழியில்லை என 42 சதவீத நிறுவனங்கள் கூறியுள்ளன. இதுதான் இந்தியாவின் உண்மையான தொழில் நிலவரம். மோடி அரசு என்ன செய்யப்போகிறது?
 

;