headlines

img

உயிர் காக்கும் மருந்து கிடைப்பதை உறுதி செய்க...

தமிழ்நாடு, மகாராஷ்டிரா, தில்லி, சத்தீஸ்கர் உள்ளிட்ட 10 மாநிலங்களில் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலையின் தாக்கம் அதிகமாகக் காணப்படுகிறது. மத்திய அரசு எத்தனைமுறை மறுப்பு தெரிவித்தாலும் பல மாநிலங்களில்   நோயைத் தடுக்க கவசமாக இருக்கும் தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மற்றொரு புறம் கொரோனா சிகிச்சையில் மருத்துவர்களுக்கு பெரும் துணையாக இருந்த ரெம்டெசிவிர் மருந்துக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா அதிகரித்தபோது இந்த மருந்தின் உற்பத்தியும் அதிகரிக்கப்பட்டது. நோய்த்தொற்று குறைந்தபின்னே உற்பத்தி குறைக்கப்பட்டதாகவும் தற்போது நோய் அதிகரித்துள்ளதால் உற்பத்தியை அதிகரிக்குமாறு மருந்து நிறுவனங்களைக் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறுகிறார்.


இந்த மருந்தின் உண்மையான விலை ஒவ்வொருபிராண்டுக்கு ஏற்ப ஒரு டோஸ் ரூ.800 முதல் ரூ.2,500வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் கள்ளச்சந்தையில் இதை விட அதிக விலைக்கு விற்கப்படுகிறது.  சில இடங்களில் ரெம்டெசிவிர் மருந்துக்குத் தட்டுப்பாடு உள்ளதால் கோவிட்-19 நோயாளிகளுக்குஸ்டீராய்டு மருந்துகளைக் கொடுக்க வேண்டியகட்டாயத்துக்கு மருத்துவர்கள்  தள்ளப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது ரெம்டெசிவிர் மருந்து ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடைவிதித்துள்ளது. 

``ரெம்டெசிவிர் என்பது ஒரு ஆன்டிவைரல் மருந்து. கொரோனா சிகிச்சைக்காகத் தமிழகம்உட்பட பல்வேறு மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் இந்த மருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.ஆப்பிரிக்க நாடுகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்திய எபோலா வைரஸ் நோய்க்காகக் கண்டுபிடிக்கப்பட்ட இந்த மருந்து கொரோனா சிகிச்சைக்கு நன்குபயன்படுவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். முதல் அலையின்போது தமிழகத்தில் இந்த மருந்துகோவிட்-19 சிகிச்சைக்கான நெறிமுறையின் கீழ்கொண்டு வரப்பட்டது. தமிழகத்தில் கோவிட் மரணங்களைக் குறைத்ததில் இந்த மருந்துக்குப் பெரும்பங்கு உண்டு. உலக அளவில் கோவிட் மரணங்கள்2.5 - 3.3 சதவிகிதம் வரை இருந்தபோது, இந்தியாவில்வெறும் 1.4 சதவிகிதமாகக் கட்டுப்படுத்தியதற்கு இந்த மருந்து பெரும் உதவி புரிந்தது.

இந்த மருந்து கொடுக்கப்படும்போது ஒரு நோயாளி,தொற்று தீவிரமாகி தீவிர சிகிச்சைப் பிரிவுக்குச் செல்வது தடுக்கப்படுகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் தேவை  அதிகமாக இருந்ததால் அதிக விலைக்கு இந்த மருந்தை வாங்குவதற்கு அம்மாநில மருத்துவமனைகள் தயாராக இருந்தன. அதனால்பிற மாநிலங்களில் இருப்பிலிருந்த மருந்து கறுப்புச்சந்தையில் கூடுதல் விலைக்கு மகாராஷ்டிராவுக்குவிற்பனை செய்யப்பட்டது. இம்மருந்தின் உற்பத்தியை அதிகரித்து அரசே கொள்முதல் செய்துமருத்துவமனைகளுக்கு வழங்கவேண்டும். இந்த மருந்தினை இந்தியாவில் தயாரிக்கும்நிறுவனங்கள், தங்களிடம் உள்ள இருப்பு விவரத்தையும், விநியோகஸ்தர்கள் விவரத்தையும், தங்கள் இணைய தளத்தில் அறிவிக்கவேண்டும் இது தவிர, மருந்து கட்டுப்பாட்டுத்துறையினர் இந்த மருந்தின் கையிருப்பைச் சோதனை செய்து, இந்த முக்கியமான மருந்து கள்ளச்சந்தையில் விற்கப்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

;