headlines

img

பெரு நிறுவனங்களுக்கு பலி கொடுக்கும் பட்ஜெட்

2047 ஆம் ஆண்டு இந்தியா வளர்ந்த நாடாகிவிடும் என்றும் அதனை நோக்கிய திசையில் ஒன்றிய அரசின்  2024-25ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் பயணிப்ப தாகவும் பிரதமர் மோடியும் மத்திய அமைச்சர்க ளும் பெருமிதம் பொங்க பேசி வருகிறார்கள். 25 கோடிப் பேரை வறுமையிலிருந்து விடுவித்து விட்டதாக அரசு தம்பட்டம் அடித்துக் கொள்கி றது. இதற்கு அவர்கள் எடுத்துக்கொண்ட அளவீடு என்ன என்றால் அந்த 25 கோடிப் பேரையும் அனைவருக்கும் வங்கிக் கணக்கு திட்டத்தின் கீழ் கொண்டு வந்து விட்டோம் என்பதுதான்.  

சுகாதாரத்துறைக்கு  முந்தைய ஆண்டைக்  காட்டிலும் 1481 கோடி அதிகமாக ஒதுக்கப்பட்டா லும், 6 விழுக்காடு பணவீக்கத்தோடு ஒப்பிடும் போது இந்த  நிதி குறைவே. விவசாயிகள் பற்றி பேசிய நிதி அமைச்சர் விவசாயிகள் தற்கொலை குறித்து வாய்திறக்கவில்லை.  80 கோடிப் பேருக்கு இலவச தானியத்தைப் பற்றிப் பேசினார். ஆனால் உலகளாவிய பசி குறியீட்டில் இந்தியாவின் தரவரிசையைப் பற்றியோ அல்லது குழந்தைகளிடையே காணப்படும் பரவ லான ஊட்டச்சத்து குறைபாடு பற்றியோ அவர் பேசவில்லை.  நாட்டில் உணவுப் பணவீக்கம் 10 சதவீதமாக உள்ளது. இதைப்பற்றியும் அவர் வாய்திறக்க மறுக்கிறார்.

நான்கு ஆண்டுகளாக தொழிலாளர்களுக்கான உண்மையான ஊதியம் தேக்கமடைந்துள்ளது.   “நாட்டின் 60 சதவீத செல்வத்தை வெறும் 10 சதவீதத்தினர் வைத்துள்ளனர். அவர்களே  தேசிய வருமானத்தில் 57 சதவீதத்தை ஈட்டுகி றார்கள். கடந்த 10 ஆண்டுகளில் வருமான சமத்துவமின்மை கணிசமாக அதிகரித்துள்ளது. இதையெல்லாம் நிதியமைச்சர் தனது உரையில் மறைத்துவிட்டார். 2014 ஆம் ஆண்டி லிருந்து உருவாக்கப்பட்ட 15 எய்ம்ஸ் நிறு வனங்களில் ஒன்று கூட இன்னும் முழுமை யாக செயல்படவில்லை.

மதுரை எய்ம்ஸ் ஒற்றைச் செங்கலோடு நிற்கிறது.  இதில் 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்தநாடாக மாறிவிடுமாம்.  நிதியமைச்சர் சமர்ப்பித்துள்ள 2023-24ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட புள்ளி விவ ரங்கள் சமூக நலத்திட்டங்களுக்கு ஒன்றிய அரசு எவ்வளவு நிதியை வெட்டியுள்ளது என்பதை அம்பலப்படுத்தியுள்ளது.  உணவுப் பொருள்க ளுக்கான மானியம் 2022-23க்கும் 2023-24க்கும் இடையே  ரூ.60,470 கோடி வெட்டப்பட்டுள்ளது. ரசாயன உரங்களுக்கான மானியம் ரூ.62,445 கோடி குறைக்கப்பட்டுள்ளது. எனவே ஒன்றிய அரசின் பட்ஜெட் நாட்டின் வளர்ச்சிக்கான பட்ஜெட் அல்ல. 140 கோடி மக்களின் நலன் களை பெரு நிறுவனங்களுக்கு பலிகொடுக்கும் பட்ஜெட்.