headlines

img

அவர் வாழ்வின் இலக்கணம் - தவத்திரு பாலபிரஜாபதி அடிகளார்

பெரியவர் தோழர் என்.சங்க ரய்யா அவர்கள் நூறாவது அகவையினை எட்டும் இனிய நாளில் அவரது தோழர்களுடன்  தோள் நின்று வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். சுதந்திரப் போ ராட்டம் பெரியவர் தோழர்  என்.சங்கரய்யா போன்ற தனக்கென வாழாது, நாட்டுக்காக உழைத்த உத்தமர்களின் உழைப் பின் பயனால் தான் வெற்றி கண்டது.  நாடு நலம் பெற எல்லோரும் எல்லாம் சமமாகப் பெற பொது உடமை சிந்தனை யாளர்களின் செயல்பாடுகளே பெரிதும் உதவிட முடியும். தனிஉடமை முதலா ளித்துவ சிந்தனையாளர்களின் செயல் பாடுகள் நாட்டு நலனை காக்க சிறிதும் உதவிடாது. கார்ப்பரேட்டுகளின் நலன் சார்ந்தே அமைந்திருக்கும்.

வாக்கும், வாழ்வும், செயலும் அனை வருக்குமானதாக்கி அனைத்துத் தரப்பி னரின் நலன் காக்க போராட்டங்கள், பொ துக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என  தன் வாழ்க்கை முழுவதையும் செலவிட்டு அடக்குமுறை சிறைக் கொடுமைகளை ஏற்று வாழும் பெரியவர் தோழர் என்.சங்க ரய்யா அவர்களின் வாழ்க்கை முறையே எதிர்கால பலன் காக்கும் செய்திகள் நிறைந்தது. கற்றது கையளவே - நாமும் அவரது  நூற்றாண்டு வாழ்வில் கற்றுக் கொள்ள வேண்டியது நிறையவே உள்ளது. அவரை முன் மாதிரியாய் ஏற்று  வாழ்ந்து பார்ப்பதே அவரைப் பெருமைப்படுத்தும் செயலாக அமையும்.

இடதுசாரிச் சிந்தனைகளே இந்தியப் பெருநிலத்தினை இணைக்கும் பேராற்றல் கொண்ட சக்தியாகும். சாதி, மதம், மொழி, பாலின வேறுபாடுகளைக் கடந்த சமத்துவ வாழ்வை எளிமை,  வாய்மை, தூய்மை, விடாமுயற்சி, போ ராட்டம், கடின உழைப்பு என வாழ்ந்து காட்டி வாழும் வரலாறு பெரியவர் தோழர் என்.சங்கரய்யா அவர்கள். அவர் வாழ்வின் இலக்கணம். இலக்கணமாய் வாழ்ந்து வரும் அவரிடம் இலக்கணம் கற்று  இணக்கமாய்த் தோழராய் வாழ்வோம். நாட்டு நலனை வாழ்விப்போம். வாழ்க தோழர் என்றும் நலமாய். 

;