headlines

img

புற்று நோய் செல்கள்....

இந்திய பொதுத்துறை நிறுவனங்களை மகாரத்னா என்றும் நவரத்னா என்றும் மினி ரத்னாக்கள் என்றும் போற்றுகிறோம். 146 மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் இருக்கின்றன. இந்த ரத்தினங்கள் சத்தமில்லாமல், பிரதமர் நரேந்திர மோடியின் கார்ப்பரேட் கூட்டுக் களவாணி நண்பர்களுக்கு தாரை வார்க்கப்படும் விதத்தில், இந்நிறுவனங்களின் முதன்மையான இயக்குநர் பொறுப்புகளில் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த அதிர்ச்சிகர தகவலை, இரண்டு நாட்களுக்கு முன்பு இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டின் புலனாய்வு செய்தி அம்பலப்படுத்தியுள்ளது. 

146 மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் 98 நிறுவனங்களின் விவரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.இந்த நிறுவனங்களில் மொத்தம் 172 சுயேட்சையானஇயக்குநர் பதவிகள் உள்ளன. இவற்றில் 67 பொதுத்துறை நிறுவனங்களின் நிர்வாகக் குழுவில் முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட சுயேட்சை இயக்குநர்கள் பதவியில் நியமிக்கப்பட்டுள்ள 86 பேர் நேரடிபாஜக நிர்வாகிகள் என்பது தெரிய வந்துள்ளது. பெல் நிறுவனம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், இந்திய உருக்கு ஆணையம், இந்துஸ்தான் பெட்ரோலியம், கெயில் இந்தியா நிறுவனம், பவர்கிரிட் கார்ப்பரேஷன், இந்திய ஷிப்பிங் கார்ப்பரேஷன், ஆயில் இந்தியா நிறுவனம், ராஷ்டிரிய இஸ்பட் நிகாம் லிமிடெட், நெய்வேலி லிக்னைட்கார்ப்பரேஷன், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ்,இந்திய விமான நிலைய ஆணையம் என பட்டியல் நீள்கிறது. இந்த நிறுவனங்களின் முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட இயக்குநர்களாக நியமிக்கப்பட்டுள்ள பாஜக நிர்வாகிகளின் வேலை,இந்த நிறுவனங்களை படிப்படியாக தனியார்மயமாக்குவதற்கான நடவடிக்கைகளை உள்ளிருந்தேதீவிரமாக்குவதுதான். இவற்றில் பெரும்பாலானவை மகாரத்னா என்று போற்றப்படுகிற, ஆண்டுக்கு ரூ. 25 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக லாபம்சம்பாதித்து நாட்டிற்கும் மக்களுக்கும் சேவையாற்றிக் கொண்டிருக்கிற, மிகப் பிரம்மாண்டமான சொத்துக்கள் கொண்ட, பல்லாயிரக்கணக்கான திறன்மிக்க ஊழியர்களையும், கட்டமைப்பையும் கொண்ட நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் தனியாருக்கு தாரை வார்ப்பது என்பதில் மோடி அரசு மிகமிகத் தீவிரமாக இறங்கியுள்ளது. அவரதுகார்ப்பரேட் கூட்டுக் களவாணி நண்பர்கள் பொதுத்துறை நிறுவனங்களையும், அவற்றின் சொத்துக்களையும் கபளீகரம் செய்வதற்காக வேட்கையோடு காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு எளிதாக உதவும் பொருட்டு மோடி அரசு தனது கூலிப்படையை பொதுத்துறை நிறுவனங்களின் இயக்குநர்களாக நியமித்திருக்கிறது. ஏற்கெனவே மோடியின் கூட்டுக் களவாணிகள் இந்திய மக்களின் செல்வங்களை தங்கள் வசம்மடைமாற்றி, வாரிக் குவித்துக் கொண்டிருக்கிறார்கள். நாட்டில் 75 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமையின் பிடியில் சிக்கியிருக்க, இதே காலத்தில் மகாகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 102 லிருந்து 140 ஆக அதிகரித்துள்ளது மட்டுமல்ல; அவர்களது கைகளில் முன்பு இருந்ததை விட இரண்டு மடங்கு செல்வம் - 600 பில்லியன் டாலர் அளவிற்கு குவிந்துள்ளது. இந்த நிலையில் பொதுத்துறை நிறுவனங்களை உள்ளிருந்தே அரித்து அழிக்கும்புற்றுநோய் செல்களாக பாஜக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

;