headlines

img

தோல்வியை மறைக்க  மாநில அரசுகள் மீது பழி....

கொரோனா தொற்றைத் தடுக்கத் தவறிய மிகமோசமான பிரதமர் என்ற அவப்பெயரை பிரதமர்மோடி பெற்றிருக்கிறார். முதல் தொற்று பரவல் முடிந்த போது வெற்றிகரமாக நோய் பரவலை கட்டுப்படுத்தியதாக மார்தட்டிக்கொண்ட பிரதமர்,

ரோப்பியநாடுகளில் ஏற்பட்டதைபோன்று இரண்டாவது பரவல் இந்தியாவிலும் வரக்கூடும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்தபோதிலும்  அதற்கு ஏற்ப உரியமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இதனால் கடந்தசில மாதங்களாக அதிகரித்த நோய்த்தொற்றால் நாடு முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஆக்சிஜன் தேவைஅதிகரித்தது. அதற்குள்  ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து விட்டனர். ஒவ்வொரு மாநிலத்தில்இருந்தும் மரண ஓலங்கள் மத்திய ஆட்சியாளர்களின் காதுகளை துளைத்தெடுத்தபின்னரே  மருத்துவத்தேவைக்கான ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தது.  ரயில்கள், விமானங்கள் மூலமாக கொண்டு செல்லப்பட்டது. ஆக்சிஜனை பிரித்தெடுத்து அனுப்புவதிலாவது முறையாக நடந்துகொண்டதா என்றால் இல்லை. அதிலும் அரசியல். தனக் தோதான  மாநிலங்களுக்கு அதிகளவும் மற்ற மாநிலங்களுக்கு குறைவாகவும்அனுப்பி பாரபட்சமாக நடந்துகொண்டது. இதனால் மாநிலங்கள் தங்களுக்கு தேவையான ஆக்சிஜனை தனியார் ஆலைகள் பொதுத்துறை ஆலைகள் மூலமாக உற்பத்தி செய்தும் நேரடியாக கொள்முதல் செய்தும் தட்டுப்பாட்டுக்கு தற்காலிகமாக தீர்வு கண்டுள்ளன.

இது ஒருபுறம் இருக்க கொரோனாவை தடுக்கதற்போதைக்கு தடுப்பு ஊசி ஒன்றே கேடயமாகஉள்ளது. கடந்த ஜனவரி மாதம் நாடு முழுவதும்தடுப்பூசி செலுத்தும் இயக்கம் தொடங்கப்பட்டு இதுவரை 4கோடி டோஸ்கள் தான் போடப்பட்டுள்ளன. அதிலும் இரு டோஸ்கள் போடப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியை கூட எட்டவில்.மாநிலங்களுக்கு தேவையான தடுப்பூசியை மத்தியஅரசு வழங்கவில்லை. பன்னாட்டு அளவில் ஒப்பந்தப் புள்ளி கோரி கொள்முதல் செய்துகொள்ள தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் முயற்சிக்கும்போது அதனால் பயன் இல்லைஎன்றும் மாநிலங்களுக்கு நேரடியாக தடுப்பூசி கிடைக்காது என்றும் மத்திய அரசின் மூலமாகத்தான் வழங்குவோம் என்றும்  கூறுகிறது.

130 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில்நேற்று முன்தினம் வரை மத்திய அரசு மாநிலங்களுக்கு 22 கோடியே 16லட்சத்து 11 ஆயிரத்து 940 தடுப்பூசிகளை தான் வழங்கியுள்ளது.  கடந்த மாதம் நாள்ஒன்றுக்கு 25லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில் இம்மாதம் இது 18லட்சமாக குறைந்துள்ளது. இதற்கு காரணம் தடுப்பூசி தட்டுப்பாடு தான். இரண்டு தனியார் நிறுவனங்களிடமிருந்து மட்டுமே மத்திய அரசு தடுப்பூசியை கொள்முதல் செய்கிறது. பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு வந்தவுடன் ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசிக்கு அனுமதி அளித்தது. தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவும் சூழ்நிலையில்செங்கல்பட்டில் செயல்படாமல் உள்ள எச்எல்எல் பயோடெக் நிறுவன தடுப்பூசி மையத்தில் உற்பத்தியை தொடங்கவேண்டும். இல்லையென்றால் மாநில அரசுக்கு  குத்தகைக்கு வழங்கவேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை நியாயமானது. இந்த கோரிக்கைக்கு மத்திய அரசு உடனே செவிசாய்க்க வேண்டும். தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் உயிரிழப்புக்கே வழிவகுக்கும்.

;