headlines

img

மூர்க்கத்தின் முனை முறிப்போம்!

தனிப் பெரும்பான்மை இல்லாத நிலையிலும் ஒன்றிய பாஜக அரசு கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவை கொண்டு வந்தது. எதிர்க்கட்சியி னரின் கடும் எதிர்ப்பையடுத்து நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பியது. ஆனால் கூட்டுக் குழு கூட்டங்களையும் அதன் தலைவர் ஜெக தாம்பிகாபால் நாடாளுமன்றத்தைப் போலவே ஒரு தலைப்பட்சமாகவே நடத்தினார். அதன் உச்ச மாக 10 எதிர்க்கட்சி உறுப்பினர்களை இடை நீக்கம் செய்து வெளியேற்றவும் செய்தார்.

நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதிக்க முடியாத விஷயங்களை ஆழமாக விவாதித்து ஒருமித்த கருத்துக்களுடன் சட்டமாக்கவே கூட்டுக்குழு அமைக்கப்படும். ஆனால் பாஜக வோ ஏற்கெனவே கருத்து வேறுபாடுகளை மேலும் அதிகரிக்கும் வகையிலும் பாதிப்பை கூடுத லாக்கும் முறையிலும் புதிய புதிய திருத்தங்களை கொண்டு வந்திருக்கிறது. மசோதாவின் அனை த்து 44 பிரிவுகளிலும் திருத்தங்கள் செய்திட விவா திக்க வலியுறுத்திய எதிர்க்கட்சியினரின் கோ ரிக்கைகளும் திருத்தங்களும் ஏற்கப்படவில்லை. ஆனால் பாஜகவினர் விரும்பிய 14 பிரிவுகளில் 32 திருத்தங்கள் மட்டுமே ஏற்கப்பட்டுள்ளன.

முஸ்லிம் அல்லாத 2 பேர் உறுப்பினர் என்பதை 4 பேர் என்றும் வக்பு சொத்துக்களை புதிய சட்டம் உருவாவதற்குள் பதிவு செய்ய வேண்டும் என்றும் சொத்துக்களை அளவிடும் அதிகாரம் ஆட்சியர் என்பதற்குப் பதில் சிறப்பு அதிகாரி செய்வார் என்றும் நன்கொடை வழங்கு பவர் குறைந்தது 5 ஆண்டுகள் இஸ்லாமியர் என்ப தற்கு ஆதாரம் கொடுக்க வேண்டும் என்பதுள் ளிட்ட  மேலும் மோசமாக்கும் திருத்தங்களையே கூட்டுக்குழு தலைவர் ஏற்றுக் கொண்டார். ஆனால் எதிர்க்கட்சியினருக்கு பேசுவதற்கு வாய்ப் பளிக்காமலேயே கூட்டத்தை முடித்து விட்டார்.

மொத்தத்தில் முஸ்லிம்களின் நிலம், சொத்துக் கள், மதவிவகாரங்களை நிர்வகிக்கும் சுதந்தி ரத்தைப் பறிக்கும் வகையிலே இந்த சட்டத்தை நிறைவேற்றத் துடிக்கிறது பாஜக. கூட்டுக்குழு வின் பணிக்காலம் ஏப்ரல் 4 வரை இருக்கும் போதும் ஜனவரி 29க்குள் இறுதி செய்திடும் தலைவ ரின் முடிவு, ஜனவரி 31இல் அறிக்கை சமர்ப்பிக் கும் முன்கூட்டிய திட்டமிடலே ஆகும். இது தில்லி சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு கை கொடுக்கும் என்ற அவசர கதியே! 

உத்தரகண்ட் மாநிலத்தில் பொது சிவில்  சட்டம் அமல் செய்யப்படுவதும் அதன் ஒருபகு தியே! பழங்குடியினருக்கு மட்டும் விலக்களிக்கும் இந்தச் சட்டம் பற்றி முதல்வர் புஷ்கர்தாமி, இந்தச் சட்டம் எந்த மதத்தையோ, இனத்தையோ குறி வைத்து கொண்டு வரப்படவில்லை என்று கூறியிருப்பது எங்கப்பன் குதிருக்குள் இல்லை எனும் கதைதான்.

மக்கள் செல்வாக்கை இழந்து வரும் பாஜக தனது இந்த ஆட்சிக் காலத்திலேயே இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை நிறைவேற்ற- மூர்க்கத்தனமாக முயல்கிறது. அதனை இந்திய மக்கள் முறியடித்து பன்மைத்தன்மையை பாதுகாப்பது அவசியம்.