headlines

img

வழிப்பறியும் நவீனமாகிறது!

நாடு முழுவதும் நடைபெறும் சுங்கக் கட்டண க் கொள்ளை குறித்து நாடாளுமன்றத்தில் குற்றச் சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. மக்களிடம் கொள்ளையடிக்கும் சுங்கச் சாவடிகளை அகற்ற வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்த ஒன்றிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி, சுங்கச் சாவடிகள் விரை வில் அகற்றப்படும் என்றும் அதற்கு மாற்றாக இரண்டு திட்டங்கள் அரசின் பரிசீலனையில் உள்ளது என்றும் கூறியுள்ளார்.

சுங்கக் கட்டணத்தை ரத்து செய்யவோ, குறைக்கவோ ஒன்றிய அரசு தயாராகயில்லை. மாறாக கொள்ளையை நவீனப்படுத்தவும், விரைவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளனர். சுங்கச் சாவடிகளுக்கு பதிலாக வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தி செயற்கைக்கோள் அடிப்படை யில் வசூல் செய்வது ஒரு வழி. இதன் மூலம் வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாக கட்டணம் வசூலிக்கப்படும்.

இன்னொரு வழி பதிவு செய்யப்பட்ட எண் பலகை தொழில்நுட்பம் மூலம் கட்டணம் வசூலிக் கப்படும். அதாவது அந்த வாகனம் செல்லும் வழியை பதிவு செய்து கட்டணம் வசூலிக்கும் திட்டம். இந்த  திட்டம் சிறந்தது என்று கட்காரி சான்றிதழ் வழங்கியுள்ளார். இன்னும் ஆறு மாதத்தில் இந்த இரண்டில் ஒன்று மூலம் சுங்கக் கட்டண சுருட்டல் தொடரும்.

இனிமேல் சுங்கச் சாவடிகளில் நிற்க வேண்டி யதில்லை. பாஸ்ட்டிராக் வில்லையை ஒட்டி விட்டால் போதும் என்றார்கள். வங்கிகளிடமி ருந்து பெறும் பாஸ்ட்டிராக் வில்லைகளுக்கு குறைந்தபட்ச இருப்பு எதுவும் வங்கியில் தேவை யில்லை என்றும் ஒன்றிய அரசு கூறியது. ஆனால் குறைந்தபட்ச இருப்பு தேவை என வங்கிகள் ஒருபுறம் சுருட்டுகின்றன.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மூச்சுத் திணறும் வாகனப் போக்குவரத்து, அதிகரித்துக் கொண்டே செல்லும் சுங்கக் கட்டணம் கொள்ளை யால் மூர்ச்சையாகி விழும் நிலைக்கு தள்ளப்பட்டுள் ளது. அதிலும் அதிகமான சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டு சுரண்டப்படும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று.

சாலை அமைக்கும் நிறுவனங்கள் 15 ஆண்டு களுக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கும் என்றார் கள். அதை 30 ஆண்டுகளாக  நீட்டித்து தனியார் நிறுவனங்களுக்கு தாராளம் காட்டியது மோடி அரசு. மக்களிடம் கொள்ளையடிக்கப்படும் சுங்கக் கட்டணத்தை பெருமிதமாக அறிவிக்கும் அரசி டம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்.

தமிழ்நாட்டில் மட்டும் 48 சுங்கச் சாவடிகள் மூலம் ஆண்டுக்கு  ரூ.2,400 கோடிக்கும் மேல் வசூ லிக்கப்படுகிறது. ஒரு சுங்கச் சாவடிக்கும் மற்றொரு சுங்கச் சாவடிக்கும் இடையில் 60 கி.மீ இடை வெளி வேண்டும் என்கிறது விதி. ஆனால் எந்த விதியும் பின்பற்றப்படுவதில்லை. இரவு, பகலாய் நடக்கும் கொள்ளையை நவீனப்படுத்துவதற்கு பெயர்தான் டிஜிட்டல் இந்தியா.

;