headlines

img

படைப்புச் சுதந்திரத்தை பறிக்க முயல்வதா?

2டி எண்டர்டெய்ன்மெண்ட் சார்பாக திரைக் கலைஞர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா தயாரிப்பில் ஞானவேல் இயக்கத்தில் வெளியாகியுள்ள ஜெய்பீம் திரைப்படம் அனைத்துப் பகுதி மக்களிட மும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குறவர், பழங்குடி இனத்தைச் சேர்ந்த ராஜாக்கண்ணு காவல்நிலையத்தில் அடித்து படுகொலை செய்யப்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் போராட்டம் மூலமாக இது வெளியுலகிற்கு தெரிய வந்தது. வழக்குரைஞர் சந்துரு உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு  இந்த வழக்கில் ஒரு திருப்புமுனையாகஅமைந்தது. 

இதைத்தொடர்ந்து வழக்கறிஞர் வெங்கட்ராமன் இந்த வழக்கை திறம்பட நடத்தி குற்றமிழைத்தோருக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து நடத்திய போராட்டத்தின் காரணமாகவே இது  சாத்தியமாயிற்று. இதேபோன்று தமிழகம் முழு வதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏராளமான கள மற்றும் சட்டப்போராட்டங்களை நடத்தி நீதியை நிலைநாட்டியுள்ளது. 

ராஜாக்கண்ணு கொலை வழக்கின் ஒரு பகுதி ஜெய்பீம் திரைப்படத்தில் சித்தரிக்கப் பட்டு பொதுவெளியில் அதிர்வை ஏற்படுத்தி யுள்ளது. ஆனால் சிலரை இந்தப் படம் ஆத்திரப் படுத்தியுள்ளது. ஒரு காட்சியில் ஒரு குறிப்பிட்ட  சாதியைக் குறிக்கும் காலண்டர் இடம்பெற்றிருப்ப தாகக் கூறி எதிர்ப்பு எழுந்த நிலையில் படக்குழு அந்தக் காட்சியை மாற்றி அமைத்துள்ளது.

எனினும் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் சில கேள்விகளை  எழுப்பி திரைக்கலைஞர் சூர்யாவுக்கு கடிதம் எழுதி யிருந்தார். ஒரு கலைப் படைப்பை முன் வைத்து  எதிரும் புதிருமாக விவாதம் நடப்பது ஆரோக்கிய மானதே. ஆனால் அன்புமணி ராமதாஸ் தன்னுடைய கடிதத்தில் சூர்யாவின் எதிர்கால திரைப்படங்கள் வெளியாக முடியாத சூழ்நிலை ஏற்படும் என மிரட்டல்தொனியில் சில வார்த்தை களை பயன்படுத்தியிருந்தார். சூர்யா இதற்கு பக்குவமாக பதிலளித்து, தனிப்பட்ட முறையில் எந்தவொரு சமூகத்தையும் இழிவு படுத்தும் நோக்கம் தமக்கு இல்லை என்று குறிப்பிட்டிருந்தார். 

இதுகுறித்து தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்ற தமுஎகச பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா கருத்துரிமை தொடர்பாக சில கருத்துக்களை முன்வைத்தார். இதைத்தொடர்ந்து பாமகவைச் சேர்ந்த சிலர் அவரது அலைபேசி எண்ணை பொதுவெளியில் பகிர்ந்து மிரட்டல் விடுத்தனர். இதனால் அவரை இழிவுபடுத்தும் வகையில் மிரட்டியுள்ளனர்.

இந்தப் பின்னணியில் மயிலாடுதுறை பாமக பிரமுகர் ஒருவர் நடிகர் சூர்யாவை தாக்கும்  இளைஞர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு தரப்படும் என்று பகிரங்கமாகவே அச்சுறுத்தினார். மயிலாடுதுறையில் சூர்யா நடித்த படம் ஓடிய திரையரங்கு ஒன்றில் பாமகவினர் ரகளை செய்து  படத்தை நிறுத்தியுள்ளனர். இந்தப் போக்கு மிகவும் ஆபத்தானது. ஆர்எஸ்எஸ் பரிவாரம் இத்தகைய பாணியில்தான் செயல்பட்டு கருத்துரி மையை நசுக்கும். இந்தப் போக்கு தமிழகத்திலும் தலைதூக்கியிருப்பது ஆபத்தானது. பாமக தலைமை இதை தடுத்து நிறுத்த வேண்டும். அனைத்து ஜனநாயக சக்திகளும் இந்தப் போக்கை கண்டிக்க வேண்டும்.

;