மகாராஷ்டிர மாநிலத்திற்கு இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தலைமைத் தேர்தல் ஆணை யர் ராஜீவ்குமார் தேர்தல் தயாரிப்புகள் குறித்து நேரில் ஆய்வு செய்துள்ளார்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் போலி செய்திகள் பரவுவதைத் தடுக்கவும், சமூக ஊடகங்களில் போலிச் செய்திகளை பரப்புவோர் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார். போலிச் செய்திகள் தடுக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் தேர்தல் ஆணையர் இந்த விசயத்தில் பாரபட்சம் இல்லாமல் நடந்து கொள்ள வேண்டும்.
சமூக ஊடகங்களின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் மக்களிடையே மதம், இனம், சாதி, அடிப்படையில் பகைமையை தூண்டிவிடும் போக்கு அதிகரித்து வருகிறது. சமூக ஊடகங்களை கையாள்வோர் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் என்பது ஒருபுறமிருக்க, தேர்தல் ஆணையம் நடுநிலையோடும் நம்பகத் தன்மையோடும் நடந்து கொள்வது அவசியம்.
கடந்த மக்களவைத் தேர்தலின்போது பிரதமர் நரேந்திர மோடி துவங்கி ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரை தங்களது தேர்தல் பிரச்சாரத்தில் மக்களிடையே மத ரீதி யிலான பகைமையைத் தூண்டும் வகையில் பேசி னர். குறிப்பாக சிறுபான்மை மக்களை அச்சு றுத்தும் வகையில் பல கூட்டங்களில் பேசினர்.
இதுகுறித்து தேர்தல் ஆணையத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட பல்வேறு எதிர்க்கட்சிகள் சார்பில் புகார் மனுக்கள் அனுப்பப்பட்டன. ஆனால் பிரதமர் நரேந்திர மோடிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பக் கூட தேர்தல் ஆணையம் தயாராக இல்லை. கடுமையான நிர்ப்பந்தம் உருவான நிலை யில் பாஜக தலைவர் நட்டாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
ஆனால் அந்த நோட்டீசுக்கு பாஜக தரப்பில் என்ன பதில் அளிக்கப்பட்டது, அதன் மீது தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுத்தது என்பது பற்றி கூட இதுவரை தகவல் இல்லை. தேர்தல் தேதியை அறிவிப்பதிலிருந்து, எந்தெந்த மாநிலத்திற்கு எப்போது தேர்தல் என்பது வரை ஒன்றிய அரசின் விருப்பத்திற் கேற்பவே தேர்தல் ஆணையம் நடந்துகொண்டது.
தேர்தல் ஆணையர் நியமனத்திலேயே வெளிப்படைத் தன்மை இல்லை. ஒன்றிய ஆளும் கட்சிக்கு விசுவாசமானவர்களே தேர் தல் ஆணையர்களாக நியமிக்கப்படுகின்றனர். இந்தப் போக்கு முற்றாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும். தேர்தல் ஆணையம் நேர்மையாகவும் வெளிப்படைத்தன்மையோடும், இழந்துவிட்ட தன்னுடைய நம்பகத்தன்மையை மீட்கும் வகையிலும் இனியாவது செயல்பட வேண்டும்.