இந்தியா ஓர் உணவு உபரி நாடு என்றும், உலக உணவுப் பாதுகாப்புக்கான தீர்வுகளை உரு வாக்குவதற்காக நாங்கள் பணியாற்றிக் கொண்டி ருக்கிறோம் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
உலகிலேயே மோடியைத் தவிர ஆட்சி அதி காரத்தில் உள்ள ஒரு அரசாங்கத்தின் தலைவர், அப்பட்டமாக இப்படி பொய் பேச முடியுமா, உண்மைக்கு புறம்பான விபரங்களை பரப்ப முடியுமா என்பது சந்தேகமே.
இந்தியா உண்மையிலேயே உணவு உபரி நாடாக இருக்குமானால், ஏன் பசி, பட்டினியின் அளவுகள் அதிகரிக்கின்றன; ஊட்டச்சத்தின்மை அதிகரிக்கிறது; குழந்தைகள் இறப்பு விகிதமும், இரத்த சோகையும் அதிகரித்துள்ளது என்ற கேள்விகள் எழுகின்றன. உலக பட்டினிக்குறி யீட்டில் மொத்தமுள்ள 125 நாடுகளில் இந்தியா 111 வது இடத்தில் உள்ளது. தேசிய குடும்ப சுகாதார சர்வே - 5, நாட்டின் 57 சதவீத பெண்கள் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவலை வெளிப்படுத்தியுள்ளது. மாநில அளவில் பெண்களின் மக்கள் தொகை யில் சரிபாதிக்கும் அதிகமான பெண்கள் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருக்கும் மாநிலங்க ளின் எண்ணிக்கை 21இல் இருந்து 25ஆக அதி கரித்துள்ளது என்றும் அந்த சர்வே விவரித் துள்ளது.
மொத்த மக்கள் தொகையில் 55.6 சதவீத மக்கள் ஊட்டச்சத்து உள்ள உணவைப் பெற முடியாத அளவிற்கு நாடு முழுவதும் அத்தியாவ சியப் பொருட்களின் கடும் விலைவாசி உயர்வும், வறுமையும் தடுக்கின்றன என்று 2024 ஜூலையில் வெளியாகியுள்ள ஐ.நா. உணவு மற்றும் வேளாண் அமைப்பின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. 55.6 சத வீதம் என்பது சுமார் 79 கோடி மக்கள் ஆவர்.
மிகப் பெரிய அளவிற்கு இலவச உணவு தானி யத் திட்டம் இந்தியாவில் அமலில் உள்ளது என்றும், 81 கோடி மக்களுக்கு மாதம் 5 கிலோ உணவு, தானியங்கள் வழங்கப்படுவதாகவும் மோடி அரசு தம்பட்டம் அடிக்கிறது. ஆனால் இது முறை யாக அமலாகவில்லை என்பது ஒருபுறம்; மாதம் 5 கிலோ உணவு தானியம் போதாது என்பதை ஏற்க மோடி அரசு மறுப்பது மறுபுறம்.
வேறு வழியின்றி வெளிச்சந்தையில் உணவு தானியங்களை வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெளிச் சந்தையில் உணவு தானியங்களின் விலைவாசி யும், பருப்பு வகைகள், காய்கறிகள், மாமிசம் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலைவாசி யும் ஏழை, எளிய, நடுத்தர வர்க்க மக்களின் கைக ளுக்கு எட்டாதவாறு விண்ணில் பறக்கின்றன என்பதை மோடி அரசு மறைக்க முயற்சிக்கிறது. இந்தியாவில் நோயாளிகளின் எண்ணிக்கையில் பாதிக்கும் அதிகமானோருக்கு போதிய ஊட்டச் சத்து உள்ள உணவு கிடைக்காததே நோய்க்கு காரணம் என்று இந்திய மருத்துவ ஆய்வுக் கழகத்தின் துணை அமைப்பு வெளிப்படுத்தி யுள்ளது. எனவே உணவு உபரி என்று குறிப்பிடுவது மோடியின் வாய்ஜாலமே தவிர உண்மை அல்ல.