விண்வெளியில் இந்தியாவின் புதிய அத்தியாயம்
41 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு இந்திய விண்வெளி வீரர் சர்வதேச விண்வெளி நிலை யத்தை அடைந்துள்ளார். கேப்டன் சுபான்ஷு சுக்லாவின் இந்தப் பயணம் வெறும் தனிப்பட்ட சாதனை மட்டுமல்ல, இந்தியாவின் விண்வெளி எதிர்பார்ப்புகளின் புதிய கட்டத்தின் தொடக்கமாகும்.
1984இல் ராகேஷ் சர்மா சோவியத் ஒன்றி யத்தின் சல்யூட் 7 விண்வெளி நிலையத்தை அடை ந்தபோது, அது இந்திய விண்வெளி வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதிவானது. இன்று சுபான்ஷு சுக்லா அந்த பாரம்பரியத்தை முன்னெ டுத்துச் செல்கிறார். ஆக்சியம்-4 திட்டத்தின் விமா னியாகச் செயல்படும் அவர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) திறமையை யும் தொழில்நுட்ப வளர்ச்சியையும் உலகுக்கு வெளிப்படுத்துகிறார்.
இந்தப் பயணத்தில் அமெரிக்கா, போலந்து, ஹங்கேரி ஆகிய நாடுகளின் விண்வெளி வீரர்க ளுடன் இணைந்து பணியாற்றுவது, சர்வதேச ஒத்துழைப்பின் சிறந்த உதாரணமாகும். அவர்க ளுடன் சேர்ந்து 14 நாட்கள் ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்வார் சுக்லா. இந்தியாவின் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர் பேக்-அப் குழுவில் இருந் தாலும், அவருக்கும் முழுமையான பயிற்சி அளிக் கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் விண்வெளித் திறனை மேம்படுத்தும் அறிவார்ந்த முயற்சியாகும்.
இந்தப் பயணம் இந்தியாவின் ககன்யான் திட் டத்திற்கு மிகவும் மதிப்புமிக்க அனுபவத்தை வழங் கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுபான்ஷு சுக்லா மற்றும் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர் ஆகியோர் பெறும் இந்த நேரடி அனுபவம், இந்தியாவின் சொந்த மனிதர் விண்வெளிப் பய ணத் திட்டத்தை வலுப்படுத்தும்.
இந்தப் பயணத்தில் ஸ்பேஸ் எக்ஸ், ஆக்சியம் ஸ்பேஸ் போன்ற தனியார் நிறுவனங்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. விண்வெளி ஆராய்ச்சியில் தனியார் நிறுவனங்களின் ஆதிக்கம் அதிக ரித்து வருவது, இந்தத் துறையின் வணிகமய மாக்கலை சுட்டிக்காட்டுகிறது.
2031இல் தற்போதைய சர்வதேச விண்வெளி நிலையம் செயலிழந்த பிறகு, ‘ஆக்சியம் நிலை யம்’ உள்ளிட்ட தனியார் விண்வெளி நிலையங்கள் அதன் இடத்தைப் பிடிக்கும். இது விண்வெளி ஆராய்ச்சியின் எதிர்காலம் குறித்த கேள்விக ளை எழுப்புகிறது. அரசுத் துறையின் கட்டுப் பாட்டில் இருந்த விண்வெளி ஆராய்ச்சி, லாப நோக்கத்துடன் இயங்கும் தனியார் நிறுவனங்க ளின் கைகளுக்கு மாற்றப்படுவது ஆபத்தானது. இந்தச் சூழலில், இந்தியா தனது சொந்த விண் வெளித் திறனை வளர்த்துக்கொள்வது மிகவும் அவசியம்.
விண்வெளி ஆராய்ச்சி எல்லைகளைக் கடந்த மனித குலத்தின் பொதுவான முயற்சி என் பதை இந்தப் பயணம் நிரூபிக்கிறது. பல்வேறு நாடு களின் விஞ்ஞானிகள் ஒன்றிணைந்து பணியாற் றுவது, மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்கான கூட்டு முயற்சியின் சிறந்த எடுத்துக்காட்டு.
கேப்டன் சுபான்ஷு சுக்லாவுக்கும், பேக்-அப் குழுவில் உள்ள பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயருக்கும், ஆக்சியம்-4 திட்டத்தின் மற்ற உறுப்பினர்களுக் கும் நம் வாழ்த்துகள்.