திங்கள், மார்ச் 1, 2021

headlines

img

அலட்சியம் வேண்டாம்... (கொரோனா தடுப்பூசி)

கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க  தடுப்பூசிகளை தயாரிக்கும் பணிகளில் உலக நாடுகள் அவசரம் காட்டி வருகின்றன. இதனை விஞ்ஞானிகள் கவலையுடன் விமர்சித்தும் எச்சரித்தும் வருகின்றனர். காரணம் மூன்றாவது கட்ட பரிசோதனையில்தான் அதன்பாதுகாப்பு மற்றும் செயல்திறனை உறுதி செய்ய முடியும். அதன் பின்னர் தடுப்பூசியை பயன்படுத்துவதே அறிவியல் பூர்வ அணுகுமுறையாக இருக்கும்.

ஆனால் அதற்கு மாறாக உலக சுகாதார அமைப்பும் அவசரகால பயன்பாட்டிற்கு எனசில தடுப்பூசிகளை பயன்படுத்த அனுமதித்திருக்கிறது. அதில் ஒன்றுதான் ‘பைசர் – பயோஎன்டெக்’ நிறுவனத்தின் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து. இந்த தடுப்பூசியின் முதல் டோஸ்நார்வே நாட்டில் சுமார் 42,000 பேருக்கு செலுத்தப்பட்டது. தடுப்பூசியின் பக்க விளைவுகளால் இதுவரை அந்த நாட்டில் 29 பேர் உயிரிழந்துள்ளனர். 

நம்நாட்டில் கோவாக்சின் எனும் தடுப்பூசிமூன்றாவது கட்ட பரிசோதனையை முடிக்கவில்லை. இச்சூழலிலேயே கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒருபகுதியாக தற்போது அவசர காலபயன்பாட்டிற்கு என்கிற பெயரில் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய  இரண்டு தடுப்பூசிகளையும் மத்திய அரசு அனுமதித்துள்ளது. இந்த இருதடுப்பூசிகளும் கொரோனா தடுப்பு பணிகளில் முன்களத்தில் நின்று போரிட்டு வரும்  மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்களுக்கு கடந்த ஜன.16 ஆம் தேதி முதல் போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த தடுப்பூசிகளை போட்டுக்கொண்டவர்களில் சிலருக்கு உடல் ஒவ்வாமைஏற்பட்டிருக்கிறது. சிலரின் உயிரை பறித்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன. இதனால் தடுப்பூசிக்காக முன்பதிவு செய்திருந்தவர்களில் பெரும்பகுதியினர் அதனை போட்டுக் கொள்ளதயக்கம் காட்டுகின்றனர். குறிப்பாக, தமிழகம்,கேரளம் போன்ற மாநிலங்களில் ஏற்கனவே முன்பதிவு செய்திருந்தவர்களில் வெறும் 25சதவிகிதத்தினருக்கும் குறைவானவர்கள் மட்டுமே தடுப்பூசியை போட்டுக்கொண்டுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. மறுபுறம்அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மருத்துவர்களையும், மருத்துவ பணியாளர்களையும் தடுப்பூசி போட கட்டாயப்படுத்தும் நிலைஏற்பட்டிருக்கிறது. இதுதவிர்க்கப்பட வேண்டும்.

இதற்கிடையே, பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் தடுப்பூசி மூன்றாம் கட்ட பரிசோதனையில்தான் உள்ளது. அத்தடுப்பூசி அவசரகாலப் பயன்பாட்டிற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக குண்டை வீசியிருக்கிறது. இதேபோல், ஒவ்வாமை உள்ளவர்கள் தங்களது கோவிஷீல்டு  தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டாம் என்று சீரம் இன்ஸ்டிடியூட்டும் பதறியிருக்கிறது.இந்த தடுப்பூசியால் பக்கவிளைவுகள் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் இந்த அறிக்கையின்மூலம் மக்களிடம் இன்னும் அதிகமாகியிருக்கிறது. அச்சம் நியாயமானதும் கூட. முதலில்அரசு தடுப்பூசியின் தன்மையை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அதன் மூலம் நம்பகத்தன்மையை ஏற்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இதில் அரசு அலட்சியம் காட்டக் கூடாது.

;