games

img

இந்தோனேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் - ஸ்பெயின் வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய பி.வி.சிந்து

இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, ஸ்பெயினின் கிளாரா அசுர்மெண்டியை எதிர்கொண்டு காலிறுதிக்கு சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.  

இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி இந்தோனேசியாவின் பாலி என்னும் இடத்தில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு 2 ஆம் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, ஸ்பெயின் வீராங்கனை கிளாரா அசுர்மெண்டியை 17-21, 21-7, 21-12 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் காலிறுதி சுற்றுக்கு பி.வி.சிந்து முன்னேறியுள்ளார். அதனை தொடர்ந்து காலிறுதி சுற்றில் துருக்கிய வீராங்கனை ஷட்லர் நெஸ்லிஹான்யிகியுடன் சிந்து எதிர்கொள்ள உள்ளார்.

;