games

img

பேட்மிண்டனின் வளரும் இளம் வீரர்....

சீனா, மலேசியா, தென்கொரியா, பெல்ஜியம் என்று ஆசிய, ஐரோப்பா நாடுகளில் கொடி கட்டிபறப்பது பேட்மிண்டன். அந்த பேட்மிண்ட னில் ஒலிம்பிக்கில் இரண்டாவது முறையாக வெண்கலப் பதக்கம் வென்று சாதித்த பி.வி. சிந்து, இந்தியாவின் பேட்மிண்டன் அடையாளமாகும். இன்றைய இளசுகளுக்கு அவர்தான் ரோல்மாடல். அதனால் சென்னை போன்ற பெரிய மாநகரங்களில் கிரிக்கெட் மட்டையைப் பிடித்த கைகள் தற்போது பேட்மிண்டன் ‘ராக்கெட்’டைப் பிடித்து வருகின்றன. அந்த ராக்கெட் வேகமும் எடுத்திருக்கிறது. அந்தக் கரங்களுக்கு சொந்தக்காரர்களில் ஒருவர் சிறுவன் கே.பி.ஆதித்.மாநில-தேசிய வீரர்களுடன் விளையாட வரிந்துகட்டி வரும் ஆதித், சென்னை மாவட்ட சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியிருக்கிறார். 16 வயதாகும் இந்தச்சிறுவனின் தொழில்முறை விளையாட்டா கவே மாறிவிட்டது பேட்மிண்டன். 

ரோல்மாடல்...
ஒலிம்பிக், உலகச் சாம்பியன், உலகக் கோப்பை, ஆசிய விளையாட்டுப் போட்டிகள், ஆசிய சாம்பியன், கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள், ஜூனியர் என தான் பங்கேற்ற அனைத்து தொடர்களிலும் ‘கோல்டு மெடல்’ வென்று அசைக்க முடியாக சக்தியாக, உலகின் ‘நம்பர் ஒன்’ வீரர்களில் முதன்மையானவவராக இருக்கும் சீனாவின் ‘லின் டான்’ தான் இவருக்கும் ரோல்மாடல்.ஆறு வயதில் புத்தகப் பையைச் சுமந்த தோள்கள் ராக்கெட்டையும் சுமந்தன. அதனால் ஆதித்-தின் ஆசிரியர்கள், பெற்றோர், பயிற்சியாளர் கொடுத்த ஊக்கம்காரணமாக பேட்மிண்டனில் அவர் வேகமாக முன்னேறி வருகிறார். விளையாட்டில் சாதிப்பதையே லட்சியமாகக் கொண்டுள்ளதால், தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் மேலாளராக  பணியாற்றி வரும் பொறியாளர் கார்த்தி க்கும் அவரது மனைவியும் மகனை அனைத்து வகையிலும் ஊக்கப்படுத்தி வருகின்ற னர்.

உலகக்கோப்பை, ஒலிம்பிக் என முக்கியப் போட்டிகளில் நமது வீரர்களின் சொதப்பல் இன்னமும் நீடிக்கிறது. இதற்குக்காரணம், இளைஞர்கள், சிறுவர்கள் பிரிவில் நாம் அதிக கவனம் செலுத்துவது கிடையாது.  சரியான பயிற்சியாளர்கள் இல்லாததும் வீரர்கள் உருவாகாததற்கு ஒரு காரணமாகும்.அத்துடன் தற்போது இருக்கும் பயிற்சி முறைகளில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். நமது விளையாட்டு மையமான விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும், ஒன்றிய அரசும் செய்ய வேண்டியது ஏராளம் ஏராளம்.பேட்மிண்டன் விளையாட்டில் அவர்கள் போதிய கவனம் செலுத்துவதில்லை. இதன் காரணமாகவே அடுத்த கட்ட வீரர், வீராங்கனை கள் இந்தியாவில் உருவாகவில்லை. பேட்மிண்டன் பயிற்சி முறைகளில் உள்ள இத்தகைய குறைபாட்டை பேசியிருப்பது வேறு யாருமல்ல, முன்னாள் வீரரும் சாய்னா நேவால், பி.வி. சிந்துவின் பயிற்சியாளருமான கோபி சந்த் தான்.

நம்பிக்கை...
பேட்மிண்டன் பயிற்சியில் விரைவில் சீர்திருத்தம் செய்ய வேண்டியிருப்பதையும் சுட்டிக்காட்டியிருக்கும் நிலையில், வெளிநாட்டு வீரர்களுக்கு இணையாகப் பயிற்சிபெற்றுவருவதால் அடுத்த சில மாதங்களில் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று வெற்றி வாகை சூடி, தேசிய அளவில் விளையாட வேண்டும். சர்வதேச அளவிலும் முத்திரை பதித்து தமிழ்நாட்டிற்கும் தேசத்திற்கும் பெருமை சேர்ப்பேன் என்கிறார் பதினோராம் வகுப்பு படிக்கும் ஆதித்.எந்த வயதினரும், எந்தப் பிரிவினரும், சாதி-மத பேத மின்றி, ஆண்-பெண் வேறு பாடின்றி, ஏழை-பணக்காரர் என்ற ஏற்றத்தாழ்வின்றி, சமமாகப் பங்கு பெறும் விளையாட்டுத்துறையில் இந்த சிறுவனின் தன்னம்பிக்கையும், விட முயற்சியும் தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வருவதால் அவரால் நிச்சயம் சாதிக்க முடியும்! 

- சி. ஸ்ரீராமுலு

;