games

img

தடகளப் போட்டியில் தேசிய சாதனையை முறியடித்த வீரர்....

கவுகாத்தி:
தடகளப் போட்டியில் 24 ஆண்டு கால தேசிய சாதனையை முறியடித்து தடகள வீரர்  சுனில் தவார் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

அசாமில் சாருசஜாய் ஸ்டேடியத்தில் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆடவர் தேசிய ஜூனியர் தடகளசாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.   இதில் மத்தியப்பிர தேச மாநிலத்தைச் சேர்ந்த தடகள வீரர் சுனில் தவார் என்பவர் 5 ஆயிரம் மீட்டர் தடகளப் போட்டியில் 14 நிமிடங்கள் 13.95 வினாடிகளில் இலக்கை அடைந்து தங்கப்பதக்கம் வென்றார்.  இதற்குமுன்  1996 ஆம் ஆண்டில்  கோஜென் சிங் என்பவர் 14 நிமிடங்கள் 14.48 வினாடிகளில் இலக்கை அடைந்த சாதனையையும்  2012 ஆம்ஆண்டில் லக்னோ நகரில் ராகுல் குமார் பால் என்பவரின் 14 நிமிடங்கள் 18.28 வினாடிகளில் இலக்கை எட்டிய சாதனையையும் சுனில் தவார் முறியடித்துள்ளார்.

;