games

img

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு எதிராக கையெழுத்து இயக்கம்....

டோக்கியோ:
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு எதிராகஜப்பான் நாட்டில் கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது.இதில் 3.5 லட்சம் பேர் கையெழுத்திட்டுள்ளனர்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆண்டு நடக்க இருந்த ஒலிம்பிக்போட்டி கொரோனா பரவலால் இ்ந்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டது. ஜூலை 23 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரைநடக்க உள்ளது என அறிவிக்கப்பட்டது. பாராலிம்பிக் போட்டிகள் ஆகஸ்டு 24- ஆம் தேதிதொடங்கி செப்டம்பர் 5 ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.இதற்கிடையில் அந்நாட்டில் நடந்த சர்வேஒன்றில், 58 சதவீதம் பேர் கொரோனா அச்சத்துக்கு மத்தியில் ஒலிம்பிக் போட்டியைநடத்த வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர். எனினும் கொரோனா அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு சர்வதேச பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்காமல் ஒலிம்பிக்போட்டிகளை நடத்துவதற்கு ஜப்பான் அரசு முடிவு செய்துள்ளது.இந்த நிலையில் டோக்கியோ ஒலிம்பிக்போட்டிகளை ரத்து செய்ய வலியுறுத்தி ஜப்பானைச் சேர்ந்த கென்சி உட்சுனோமியா என்பவர் கையெழுத்து இயக்கம் ஒன்றைதொடங்கினார். கடந்த ஒன்பது நாட்களில் இந்த இயக்கத்தின் மூலமாக 3 லட்சத்து50 ஆயிரம் கையெழுத்துக்கள் பெறப்பட்டுள்ளன. இதனை டோக்கியோ ஒலிம்பிக் போட்டிஅமைப்பாளர்களிடம் அவர் சமர்ப்பித்துள்ளார்.

;