games

img

டோக்கியோ ஒலிம்பிக் 2020... இந்திய அணியின் அதிர்ச்சிகள்...

குத்துச்சண்டை 

அமித் அவுட்

ஆடவர் 48 கிலோ பிரிவில் இந்தியாவின் அமித் தனது நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் கொலம்பியாவின் ரிவாஸிடம் 1- 4 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்ந்து தொடரில் இருந்து வெளியேறினார். 

                        ********

காலிறுதியில் பூஜா ராணி தோல்வி..

மகளிர் 69 கிலோ பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பூஜா ராணி சீனாவின் லி குயானிடம் 0-5 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்ந்து வெளியேறினார்.

                        ********

வில்வித்தை 

அடானு தாஸ் தோல்வி... 

ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் அடானு தாஸ் தனது எலிமினேட் சுற்றில் ஜப்பானின் ப்ரூகாவாவிடம் 4-6 என்ற செட் கணக்கில் போராடி வீழ்ந்து தொடரில் இருந்து வெளியேறினார். 

;