games

img

பாராலிம்பிக் போட்டிகள்... 19 பதக்கங்களுடன் இந்தியா சாதனை....

டோக்கியோ:
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில்  மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன. இதில் இந்தியா 19 பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.

பேட்மிண்டன் போட்டியில்  ஆடவருக்கான எஸ்.எல் 3 பிரிவில் இந்தியாவின் பிரமோத் பகத் தங்கப்பதக்கம் வென்றார். அதே பிரிவில் இந்தியாவின் மனோஜ் சர்கார் வெண்கலப் பதக்கத்தை வென்றார். ஞாயிறன்று நடைபெற்ற பேட்மிண்டன் போட்டியில், இந்திய வீரர் சுகாஷ் யத்திராஜ் வெள்ளிப்பதக்கம் வென்றார். இதனையடுத்து பேட்மிண்டனில் ஆடவர்எஸ்.எச். 6 பிரிவுக்கான இறுதிப் போட்டியில் இந்திய வீரரும், உலக தரவரிசையில் இரண்டாம் நிலை வீரருமான கிருஷ்ணா நாகர் வெற்றிப்பெற்று தங்க பதக்கத்தை கைப்பற்றி னார். பேட்மிண்டனில் மட்டும் இந்தியா 2 தங்கப்பதக்கங்களுடன் மொத்தமாக 4 பதக்கங்களை வென்றுள்ளது. டோக்கியோ பாராலிம்பிக்கில் இந்திய வீரர்கள் பதக்கங்களை குவித்துள்ளனர். 1968 முதல் 2016 வரை பாராலிம்பிக்கில் இந்தியா 4 தங்கங்களுடன் 12 பதக்கங்களை மட்டுமேவென்றிருந்தது.ஆனால்  தற்போது இதுவரை இல்லாத வகையில், 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் உள்பட19 பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்துள் ளது. குறிப்பாக துப்பாக்கி சுடுதலில் அவனி லெகாராவும், சிங்ராஜ் அதானாவும் இரட்டை பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.  பதக்கங்களை வென்ற  வீரர், வீராங்கனைகளுக்கு இந்திய மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

;