games

img

ஒலிம்பிக் : புதிய வரலாறு படைத்த இந்திய மகளிர் ஹாக்கி அணி 

டோக்கியோ ஒலிம்பிக் பெண்கள் ஹாக்கி அணி காலிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணி, முதன்முறையாக அரையிறுதிக்கு முன்னேறி சாதனைப் படைத்துள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டி கடந்த 23 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.  இதில் 11வது நாளான இன்று நடந்த பெண்கள் ஹாக்கி போட்டி காலிறுதியில் இந்தியா அணி தரவரிசையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியாவுடன் மோதியது. 

இந்த ஆட்டத்தில், இந்திய ஹாக்கி அணி ஆஸ்திரேலியாவை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. இன்றைய பரபரப்பான காலிறுதி ஆட்டத்தின் 22வது நிமிடத்தில் இந்திய வீராங்கனை குர்ஜித் கவுர் இந்தியாவின் வெற்றி கோலை அடித்தார். இதுவே அவரது முதல் ஒலிம்பிக் கோலாகவும் அமைந்தது. கோல் கீப்பர் 
சவிதா பல ஷாட்களைத் தடுத்து ஆஸ்திரேலிய அணியை ஒருகோல் அடிக்கவும் விடாமல் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தார்.  

இந்திய ஹாக்கி அணி கடைசியாக 1980 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் தங்கம் வென்றது. அதன் பிறகு 41 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தற்போது அரை இறுதிக்குள் நுழைந்துள்ளது. 

ஆஸ்திரேலியா பெண்கள் ஹாக்கி அணி 3 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள நிலையில், ஆஸி அணியை வீழ்த்தி இந்தியப் பெண்கள் ஹாக்கி அணி அரையிறு
திக்குள் நுழைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

அரையிறுதியில் அர்ஜெண்டினாவைச் சந்திக்கும் இந்தியப் பெண்கள் ஹாக்கி அணி, நிச்சயம் தங்கப்பதக்கும் வெல்லும் என்பதே ரசிகர்களின் நம்பிக்கையாக உள்ளது.  

;