games

img

ஒலிம்பிக் மல்யுத்தம்.... சோனம் அதிர்ச்சி தோல்வி...

மகளிர் 62 கிலோ எடை பிரிவின் 1/8 இறுதிச்சுற்றில் இந்திய வீராங்கனை சோனம் மங்கோலிய வீராங்கனை குரெல்குவை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே இரு வீராங்கனைகளும் ஆக்ரோஷ மாக விளையாடினர். இறுதியில் ஆட்டம் 2-2 என்ற கணக்கில் சமனில் இருந்தது. இதனால் நடுவரின் விக்டரி புள்ளிகள் (வெற்றிபுள்ளிகள்) ஆய்வு செய்யப்பட்டு இறுதியில் மங்கோலிய வீராங்கனை குரெல்கு வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்டார். அதிர்ஷ்ட வாய்ப்பில்  தோல்வியை தழுவிய இந்திய வீராங்கனை சோனம் தொடலிருந்து வெளியேறினார்.  

;