games

img

ஒலிம்பிக் ஹாக்கி... இந்திய ஆடவர் அணிக்கு குவியும் பாராட்டுக்கள்...

ஒலிம்பிக் ஆடவர்  பிரிவில் இந்திய அணி தொடக்கம் முதலே அசத்தலாக   விளையாடி குரூப் சுற்றில் ஒரே ஒரு தோல்வியுடன் 41 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக் தொடரில்  அரையிறுதிக்கு முன்னேறியது. அரையிறுதியில் பலமான பெல்ஜியம் அணியிடம் கடுமையாக போராடி இறுதி ஆட்டத்திற்கான வாய்ப்பை இழந்தது. வெண்கலப்பதக்கத்திற்கான ஆட்டத்தில் இந்தியஅணி ஜெர்மனியை எதிர்கொண்டது.இந்த ஆட்டம் தொடக்கம் முதலே மிகுந்த பரபரப்பாகவே நகர்ந்தது. ஆட்டம் தொடங்கிய 2-வது நிமிடத்தில் இருந்து 4-வது கால் பகுதி இறுதிக்கட்டம் வரை இரு அணி வீரர்களும் கடுமையாக போராடினர்.இறுதியில் இந்திய அணி 5-4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 41 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக் பதக்கத்தை (வெண்கலம்)  கைப்பற்றியது. கடைசியாக இந்திய அணி ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் (1980) தொடரில் தங்கம் வென்றது. அதன் பின் டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் வெண்கலம் வென்றுள்ளது.  ஒலிம்பிக் பதக்கம் வென்றுள்ள இந்திய  ஹாக்கி அணி வீரர்களுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

;