games

img

ஒலிம்பிக் பேட்மிண்டன்.... சிந்து அசத்தல்... அரையிறுதிக்கு முன்னேறினார்...

மகளிர் பேட்மிண்டன் ஒற்றையார் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து அதிரடிக்கு பெயர் பெற்ற ஜப்பானின் யாமகுச்சியை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே புள்ளிகள் குவிப்பதில் ஆதிக்கம் செலுத்திய சிந்து 2-0 என்ற செட் கணக்கில் யாமகுச்சியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளார். அரையிறுதியில் சீன தைபேவின் டாய் ட்ஸுங்கை எதிர்கொள்கிறார் சிந்து.       

இறுதிக்கு முன்னேறுவாரா சிந்து? 
அரையிறுதியில் சிந்துவை எதிர்கொள்ளும் சீன தைபேவின் டாய் ட்ஸு சற்று சிக்கலான விளையாட்டுத்திறன் கொண்டவர். எளிதில் சோர்வடைய மாட்டார். ஸ்பெயின்டென்னிஸ் நடத்திரம் நடாலைப்போல இறுதி வரை போராடக்கூடி யவர். ஷாட்கள் விரும்பி விளாச மாட்டார். டிராப் ஷாட்களில் அதிக அனுபவம் உடையவர். சளைக்காமல் எதிர் ஷாட்களை  திருப்பிக் கொண்டே இருப்பார். டாய் ட்ஸு சிந்துவை வீழ்த்திய அனுபவம் உடையவர் என்பதால் சிந்துவிற்கு இந்த ஆட்டம் சற்று  கடினமானது தான்.  முக்கியமாக இந்த ஆட்டத்தில் யாருக்கு வெற்றி என்பதைகணிக்க முடியாது. ஒரு வேளைஇந்த ஆட்டத்தில் சிந்து தோல்விகண்டால் வெண்கலப்பதக்கத்துக் கான ஆட்டத்திற்கு தனியாக விளையாடி தான் பதக்க வாய்ப்பை பெற முடியும். 

;