games

img

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் மதுரை ரயில்வே டிக்கெட் பரிசோதகர் ரேவதி....

மதுரை:
இந்த ஆண்டு நடைபெற்ற ஆறுபோட்டிகளில் ஐந்தில் 400 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற அனுபவமுள்ள எம்.ஆர். பூவம்மா ஒலிம்பிக் போட்டியில் இல்லாதது இந்திய தட கள அணிக்கு ஏமாற்றம் தான்.

அதே நேரத்தில்   4x400 மீ கலப்புரிலே அணியில் தமிழகத்தைச் சேர்ந்தஎஸ்.தனலட்சுமி சேர்க்கப்பட்டுள் ளார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 26 பேர் இந்திய தடகள அணியில்இடம் பெற்றுள்ளனர்.தமிழ்நாட்டைச் சேர்ந்த தனலட்சுமி சேகர், ரேவதி வீரமணி, சுபாவெங்கடேசன் ஆகிய மூன்று வீராங்கனைகள் கலப்பு 4X400 மீ தொடர் ஓட்டத்தில் இந்தியா சார்பில் பங்கேற்கின்றனர்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் சாதனை படைப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட கேரளத்தைச் சேர்ந்த விஸ்மயா,  ஜிஸ்னா மேத்யூ ஆகியோர் அணியில் இடம் பெறவில்லை.டோக்கியோ ஒலிம்பிக்கில் பங் கேற்கும் தடகள வீராங்கனைகளில் ஒருவர் ரேவதி. அவர் தமக்கு கிடைத்த வாய்ப்பை ஒரு பெரும் வாய்ப்பாக கருதுகிறார்.தமது வெற்றிப்பயணம் குறித்து நமது செய்தியாளரிடம் அவர் கூறுகையில், “விடா முயற்சிக்குக் கிடைத்த “வெற்றி”யின் மூலம் சாதனை படைக்க டோக்கியோ ஒலிம்பிக் செல்
கிறேன் என்றார்”.டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க  தகுதி  பெற்றவர்களில்மதுரையைச் சேர்ந்த  ரேவதியும் ஒருவர்.  ரேவதி (23)  மிகவும் ஏழ்மைகுடும்பத்தில் பிறந்தவர். சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தவர். பாட்டி ஆரம்மாளின் முழு அரவணைப்பில் பள்ளிக் கல்லூரிப் படிப்பை முடித்தார். தொடக்கத்தில் காலணி கூட வாங்க முடியாமல் கஷ்டப்பட்ட இவர்சர்வதேச அரங்கில் தமிழகத்தின் பெய ரையும் இந்தியாவையும் உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளார். பாட்டியாலாவில் நடைபெற்ற ஒலிம்பிக் தகுதிப் போட்டியில் 53.55 வினாடிகளில் மின்னல் வேகத்தில் இலக்கைஎட்டி முதலிடத்தைப் பிடித்து பலரையும் ரேவதி வியக்க வைத்தார்.மாநில மற்றும் தேசிய தடகளப்போட்டிகளில் பல்வேறு பதக்கங் களை ரேவதி வென்றார். ஆசியதடகள சான்பியன்ஷிப் மற்றும் சர்வதேசப் போட்டிகளிலும் பங்கேற் றுள்ள ரேவதி, ரயில்வே துறையில்மதுரையில் டிக்கெட் பரிசோதகராகப் பணியாற்றி வருகிறார். ஒலிம்பிக் போட்டிக்குச் செல்வதை பெரும் பாக்கியமாகக் கருதும் ரேவதி, தற்போது பாட்டியாலாவில் அணியினருடன் தீவிரப் பயிற்சி எடுத்து வருகிறார்.டோக்கியோவில் தடகளப் போட்டிகள் ஜூலை 31 முதல் தொடங்குகிறது.

;