games

img

சர்வதேச ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப்: 24வது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய வீரர் சாதனை 

சர்வதேச   ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் பேட்டியில் 24வது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்றதன் மூலம் இந்திய வீரர்  பங்கஜ் அத்வானி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். 

ஐபிஎஸ்எப் சர்வதேச  ஸ்னூக்கர் உலகக் கோப்பை கத்தார் நாட்டின் தோகாவில்  நடைபெற்றது. இதில் இந்திய நட்சத்திர  வீரர்  பங்கஜ் அத்வானி நேற்று தனது 24வது உலக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். அவர் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானின் பாபர் மாசிக்கு எதிராக வெற்றி பெற்றார். 

கடந்த வாரம் ஆசிய ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கஜ் அத்வானி 11வது முறையாகத் தனது ஆசியப் பட்டத்தை வென்று இருந்தார். இதைத் தொடர்ந்து தற்போது உலக சாம்பியன் பட்டத்தை 24வது முறையாக வென்று வரலாற்றுச் சாதனை படைத்து உள்ளார்.

 

;