games

img

ஒலிம்பிக்கில் மீண்டும் தங்கம் வெல்வேன்... தமிழக வீரர் மாரியப்பன் நம்பிக்கை....

சேலம்:
டோக்கியோவில் நடைபெற உள்ள பாரா ஒலிம்பிக்கில் மீண்டும் தங்கம் வெல்வேன் என்று தமிழக வீரர் மாரியப்பன் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். 

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 5 ஆம் தேதி வரை மாற்றுத்திறனாளி களுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகின்றன.இந்த போட்டிகளில் இந்தியா முழுவதிலும் இருந்து பங்கேற்கும் 54 வீரர்களுடன் பிரதமர் மோடி செவ்வாய்க்கிழ மையன்று காணொலிக்காட்சி மூலம் கலந்துரையாடினார். தமிழ்நாட்டைச் சேர்ந்த பாரா ஒலிம்பிக் வீரர் மாரியப்பன், பிரதமர் மோடியிடம் பேசினார்.  அப்போது அவரது தாயார் சரோஜா , தம்பிகள் குமார், கோபி உள்ளிட்டோரும் பிரதமர் மோடியிடம் பேசினர். இவர் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்றார். பிரதமர் மோடியிடம் மாரியப்பன் பேசுகையில், கடந்த 2016 ஆம் ஆண்டுமிகச் சிறப்பான மற்றும் கடினமான பயிற்சி, பயிற்சியாளரின் ஒத்துழைப்பு காரணமாக தங்கப்பதக்கம் வென்றேன். இந்த முறை இந்திய அரசும், தமிழ்நாடு அரசும் மிகச்சிறப்பாக ஒத்துழைப்பு வழங்கியுள் ளன. தங்கப்பதக்கம் பெற்று மீண்டும் சாதனை படைப்பேன்,’என்று நம்பிக்கையுடனும் உறுதியுடனும் தெரிவித்தார். இதை கேட்ட பிரதமர்,மாரியப்பன் நாட்டிற்கு நல்லபெயர் எடுத்துத் தரவேண்டும் என்று வாழ்த்தினார். தொடர்ந்து மாரியப்பனின் தாயார் சரோஜாவிடம் பிரதமர் பேசினார். 

;