games

img

ஜப்பான் வீரரை பந்தாடிய ஜோகோவிச்...  உள்ளூர் ஒலிம்பிக் ரசிகர்கள் அதிர்ச்சி... 

டோக்கியோ 
டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் அனைத்து ஆட்டங்களை போலவே டென்னிஸ் விளையாட்டும் சுவரஸ்யமாக நடைபெற்று வருகிறது. 

ஆடவர் ஒற்றையர் காலிறுதி ஆட்டத்தில் உலகின் முதல் நிலை வீரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், உள்ளூர் வீரரும் அதிரடிக்கு பெயர் பெற்றவருமான ஜப்பானின் நிஷிகோரியை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே ஆக்ரோஷமாக விளையாடிய ஜோகோவிச் 6-2, 6-0 என்ற செட் கணக்கில்    நிஷிகோரியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். 

டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் எங்களுக்கு ஒரு பதக்கம் கிடைக்கும் என அந்நாட்டு ரசிகர்கள் ஆவலுடன் இருந்த நிலையில், அதற்கு ஜோகோவிச் முற்று புள்ளி வைத்துள்ளார். தோல்விகண்ட  ஜப்பானின் நிஷிகோரி சாதாரண வீரர் அல்ல. அதிரடிக்கு பெயர் பெற்றவர். கடுமையான போராட்ட மனநிலை கொண்டவர். அனைத்து வகை கிரண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் காலிறுதி வரை முன்னேறியுள்ளார். 2014-ஆம் ஆண்டு அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இறுதி வரை வென்று தோல்வி கண்டுள்ளார். இத்தகைய சிறப்புடைய நிஷிகோரியை ஜோகோவிச் வெறும் 70 நிமிடங்களில் அடித்து நொறுக்கியது தான் மிகவும் சோகமான விஷயம். 

;