games

img

ஒலிம்பிக் பதக்கம் பட்டியலில் தொடரும் சீனாவின் ஆதிக்கம்....

உலகின் மிகப்பெரிய விளை யாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் தொடரின் 32-வது சீசன் ஜப்பான்  தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் உலகின் முக்கிய மான நாடுகளில் ஒன்றான இந்தியாவை தவிர மற்ற நாடுகள் மிகுந்த ஆர்வத்துடன் பதக்கங்களை குவித்து வருகின்றன. முதலிட அந்தஸ்து பெற சீனா,  அமெரிக்கா,  ஜப்பான் ஆகிய நாடுகள் முட்டி மோதி வரு கின்றன. எனினும் கடந்த 3 நாட்களாக சீனா வின் கை ஓங்கி வருகிறது. 11-வது  நாளான ஞாயிறன்று மாலை 5 மணி  நிலவரப்படி சீனா 23 தங்கம், 14 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 50 பதக்கங் களை குவித்து முதலிடத்தில் உள்ளது. ஆனால் மொத்த பதக்கங்களில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்கா மொத்தம் 57 பதக்கம் குவித்து  உள்ளது. 

ஆஸ்திரேலிய நாடு பதக்க குவிப்பில் திடீரென உத்வேகம் பெற்று பிரிட்டன், ரஷ்யா(ஒலிம்பிக் கமிட்டி) ஆகிய நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி பதக்கப் பட்டியலில் 14 தங்கம், 3 வெள்ளி,  14வெண்கலம் என 31 பதக்கங்களுடன் 4வது இடத்தைப் பிடித்துள்ளது.

பதக்கப் பட்டியல்                மாலை 5 மணி நிலவரப்படி

நாடுகள்           தங்கம்    வெள்ளி    வெண்கலம்     மொத்தம்
 

சீனா                         23               14                   13                       50
அமெரிக்கா            20                21                   14                      57

ஜப்பான்                   17                 5                     9                        31

இந்தியா ஒரே ஒரு வெள்ளிப் பதக்கத்துடன் 62வது இடத்தில் உள்ளது.

;