games

img

பளுதூக்குதல் தங்க மகன்!

வறுமை ஒருபுறம் தடை போட்டாலும், அதையும் தாண்டி சர்வதேச அரங்கில் தங்கம் வென்று இந்தியாவின் மூவர்ண கொடியை பறக்கவிட்டிருக்கிறார் தினக் கூலி தொழி லாளியின் மகன் ஒருவர்.  அசாம், மணிப்பூர் மாநிலங்களையும் வங்கதேசம், மியான்மர் நாடுகளையும் எல்லைகளாக கொண்ட வடகிழக்கு இந்தியாவின் சிறிய மாநிலங்களில் ஒன்று மிசோரம். இயற்கை எழில் கொஞ்சும் அழகிய மலைத் தொடர்கள், பனிமலை போர்த்திய ஆறுகளும், ஏரிகளும், பள்ளத் தாக்கும் நிறைந்த இந்த மாநிலம். 1972 வரைக்கும் அசாமின் ஒரு பகுதியாகவே இருந்தது. அதன் பிறகு 15 ஆண்டுகள் கழித்துதான் இந்தியாவின் 23 வது மாநில மாக உருவானது.  நாட்டில் மிகவும் பின்தங்கிய மாநில மாக இருந்தாலும் கல்வியில் கேரளாவுக்கு அடுத்து முன்னேறிய மாநிலம் மிசோரம். அதன் தலைநகர் ஜஸ்வால் பகுதியில் வசித்து வரும் பூர்வ குடிகளான பழங்குடி இனத்தைச் சார்ந்தவர் லால் மைதுவா ரால்டே. இவருக்கு நான்கு மகன்கள். தந்தை ரால்டே தேசிய குத்துச்சண்டை சாம்பியன். தந்தை வழியில் மூன்று மகன்கள் குத்துச்சண்டையில் தேசிய அளவில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளனர். ஒரு மகன் மட்டும் நண்பர்கள் கொடுத்த உற்சாகத்தால் பளுதூக்கும் வீரரானார். அவர்தான் ஜெர்மி லால்ரின்னுங்கா.

நாடே கொண்டாட்டம்!

2022 காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தைரியத்துடன் களம் இறங்கி னார். முதல் இரண்டு வாய்ப்புகளில் தனது முழு திறமையையும் வெளிப்படுத்தி அதிக எடையை தூக்கினார். ஆவலுடன் எதிர்பார்த்த வெளிநாட்டு வீரர்கள் அனை வரும் வாய்ப்புகளை வீணடிக்க, முதலிடம் பிடித்த 19 வயதாகும் ஜெர்மி, காமன்வெல்த் விளையாட்டு பளுதூக்கும் போட்டியில் முதல் தங்கப் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தார். தங்கம் வென்ற முதல் இந்தியர் என்பதால் அவரது இந்த வெற்றி இந்தியாவுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்துள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் கொண்டாடுகின்றனர். சொந்த ஊரில் வெற்றி விழா கொண்டாட்டம் கலை கட்டி  விட்டது.

தடைகளைத் தாண்டி...

ஐந்து அடி  ஐந்து அங்குலம் உயரமே கொண்ட ஜெர்மி லால்ரின்னுங்கா, ஆறா வது வயதில் தந்தையிடமே குத்துச்சண்டை பயிற்சியை துவக்கினார். தந்தைக்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரண மாக  பயிற்சி மையத்தை மூடும் நிலை ஏற்பட்டது. ஆனாலும் பயிற்சியை நிறுத்த வில்லை. தனது கிராமத்தில் செயல்பட்டு வந்த மற்றொரு உடற்பயிற்சி மையத்திற்கு சென்று வழக்கம்போல் தனது பயிற்சியை தொடங்கினார்.  அங்கு மற்ற சிறுவர்கள் எடை தூக்கு வதை பார்த்ததும் உற்சாகம் பிறந்திருக் கிறது. அதுவே பளு தூக்கும் முயற்சிக்கு ஊக்கம் தந்தது. இரவு-பகலாக மேற்கொ ண்ட பயிற்சியால் ராணுவ விளையாட்டு பயிற்சி நிறுவனத்தில் இடம் கிடைத்தது. அந்த மையத்தின் சிறந்த மாணவராக தேர்வு செய்து புனே நகரத்திற்கு அனுப்பி  வைத்தனர். அங்கு மேலும் சிறப்பு பயிற்சிகள் கொடுத்தனர். பளு தூக்கும் சாகசத்தை ஆறு வயதில் துவக்கிய மன உறுதியால் மிக இளம் வயதிலிருந்தே மிகப் பெரிய வெற்றிகளை குவிக்கதுவங்கினார். 

லால்ரின்னுங்காவின் தந்தை பொதுப் பணித் துறையில் அன்றாட கூலி வேலையும் நிரந்தரம் இல்லாமல் (மஸ்டர் ரோல்) தொழி லாளியாக வேலை செய்து வந்தார். இத னால் குடும்பம் வறுமையால் போராடியது.  மகனின் பயிற்சிக்கும், தங்கும் விடுதிக்கும் பணம் கட்ட முடியாமல் தவித்த போது, நண்பர்களும் உறவினர்களும்  கடன் கொடுத்து உதவி செய்திருக்கிறார்கள். தடைகள் பலதையும் தாண்டி முதன் முதலாக 2018 ஆம் ஆண்டு கோடைகால இளையோர் ஒலிம்பிக் போட்டிக்காக 16 வயதில் அர்ஜெண்டினா சென்றார். அங்கு 62 கிலோ எடை பிரிவில் முதலிடம் பிடித்து  தங்க வேட்டையை துவங்கினார். 2021ஆம் ஆண்டு தாஷ்கண்டில் நடந்த காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியிலும் இந்தியா வுக்கு ‘கோல்ட் மெடல்’ வென்று கொடுத்தார்.

முழங்காலில் ஏற்பட்ட காயம் காரண மாக கடந்த ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற முடியாமல் போனது தங்க வேட்டைக்கு தடையானது. இத்துடன் அவரது விளையாட்டு வாழ்க்கை முடிவுக்கு வந்து விடும் என்றும் சிலர் கூறினர். காயத்திலிருந்து முழுமையாக மீளவில்லை என்றாலும் தற்போது இங்கி லாந்தின் பர்மிங்காம் பகுதியில் நடந்து வரும் காமன்வெல்த் விளையாட்டில் நம்பிக்கையுடன் களம் இறங்கி தங்கம் வென்று அசத்தினார்.  “தங்கப் பதக்கம் வெல்ல மகனுக்கு  அனைத்து வகையிலும் ஆதரவளித்த  நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தேசத் திற்கும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். வரும் நாட்களில் இன்னும் சிறப்பாக வெற்றிகளை குவிப்பார்” என்றும் அவரது குடும்பம் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறது.

உழைப்பே உயர்வு!

சர்வதேச போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்று தந்தையின் கனவுகளை நிறை வேற்றி வருவது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அதற்கு முக்கிய காரணம்,  நிரந்தரமான வேலை இல்லை என்றாலும் வாரத்தில் மூன்று, நான்கு நாட்கள் மட்டுமே கிடைத்த கூலி வேலை செய்யும் எனது தந்தையின் உழைப்பே என்பதை தனது ட்விட்டர் பக்கத்தில் நினைவு கூர்ந்துள்ளார்‌ லால்ரின்னுங்கா.

கனவுகள் மெய்ப்பட...

இந்த தங்கம் ஒரு ஆரம்பம் தான். எனது தேசமே முழுமையாக ஆதரிக்கிறது. நான் ஒரு சிறந்த விளையாட்டு வீரன் என்று நாடே போற்றுகிறது. என்னை மேலும் மேம்படுத்த வேண்டியது உள்ளது. உடல் எடையை மட்டுமல்ல பளு தூக்கும் எடையையும் அதிகரிப்பது மிகவும் அவசியமாகிறது.  அடுத்து வரும் போட்டிகளிலும் தொடர்ந்து இந்தியாவுக்காக பதக்கங்கள் வெல்ல வேண்டும். 2024 பாரிஸ் ஒலிம்பிக்கி லும் தங்கப்பதக்கம் வென்று நமது மூவர்ண கொடி பட்டொளி வீச வேண்டும். தேசிய கீதம்  ஒலிக்க வேண்டும். அதற்காக தன்னை முழுமையாக தயார்படுத்திக் கொள்ள இப்போதே பயிற்சியை துவக்கி விட்டார். அவரது வெற்றிப் பயணம் தொடர அனைவரும் வாழ்த்துவோம்.

- சி.ஸ்ரீராமுலு



 

;