games

img

டோக்கியோ ஒலிம்பிக் 2020... 6-வது நாளில் இந்தியா...

குத்துச்சண்டை 

காலிறுதியில் பூஜா ராணி 

மகளிர் குத்துச்சண்டை 69 கிலோ பிரிவு நாக் அவுட்சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பூஜா ராணி அல்ஜீரியா வின் இஜ்ராக்கை 5-0 என்றபுள்ளிக்கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறி னார்.  

                              ************

பேட்மிண்டன் 

சிந்து வெற்றி...  

மகளிர் ஒற்றையர் குரூப் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து ஹாங்காங்கின் செயுங்கை 2-0 என்ற செட் கண்ணகில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.  

சாய் பிரணீத் அவுட் 

ஆடவர் ஒற்றையர் பிரிவில் அதிகம் எதிர்பார்த்த இந்தியாவின் சாய் பிரணீத் தனது குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் நெதர்லாந்து வீரர் மார்க்கிடம் 2-0 என்ற செட் கணக்கில் வீழ்ந்து வெளியேறினார். 

                              ************

வில்வித்தை

நாக் அவுட் சுற்றில் தீபிகா 

மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் தீபிகா குமாரி அமெரிக்காவின் ஜெனீபரை 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறினார்.

                              ************

ஹாக்கி 

இந்திய மகளிர் அணி மீண்டும் தோல்வி

மகளிர் ஹாக்கி குரூப் சுற்று ஆட்டத்தில் இந்தியா - பிரிட்டனை எதிர்கொண்டது.  தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பிரிட்டன் அணி 4-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை    வீழ்த்தியது. 

படத்தில் இருப்பவர் பூஜா ராணி 

;