games

img

டோக்கியோ ஒலிம்பிக் 2020.... 5-வது நாளில் இந்தியா...

பேட்மிண்டன் 

இந்திய ஜோடி அபாரம் 

ஆடவர் இரட்டையர் பிரிவு குரூப் சுற்று பிரிவில் இந்தியாவின் ராங்கி ரெட்டி - சிராக் செட்டி ஜோடி, பிரிட்டனின்  பென் - சீன்ஜோடியை 2-0 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி அடுத்தசுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பிரகாசப்படுத்தி யுள்ளது.

                              **************

ஹாக்கி 

இந்திய ஆடவர் அணி வெற்றி

இந்திய ஆடவர் ஹாக்கி அணி தனது 3-வது குரூப் சுற்று ஆட்டத்தில் ஸ்பெயினை எதிர்கொண்டது. 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் பலத்த சேதாரத்தை சந்தித்ததால்  இந்திய அணிவீரர்கள் கட்டுக்கோப்பாக விளையாடினர். துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய  இந்தியா3- 0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி  புள்ளிப்பட்டியலில் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்திக்கொண்டது.

                              **************

குத்துச்சண்டை 

லவ்லினா அசத்தல்

மகளிர் குத்துச் சண்டை 64 கிலோ பிரிவு நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் லவ்லினா ஜெர்மனியின் நடினேவை 3-2 புள்ளிக்கணக்கில் வீழ்த்தி காலி றுதிக்கு முன்னேறினார்.  

                              **************

அதிர்ச்சிகள்

டேபிள் டென்னிஸ் 

கமல் தோல்வி

ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் கமல் தனது 3-வது சுற்று ஆட்டத்தில் சீன வீரர் மா லாங்கிடம்  1-4 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

;