games

img

டோக்கியோ ஒலிம்பிக் 2020... 2-ஆம் நாளில் இந்தியா...

ஹாக்கி 

இந்திய ஆடவர் அணி வெற்றி 

இந்தியாவின் பதக்க வாய்ப்பு விளையாட்டுகளில் ஒன்றான ஹாக்கி பிரிவில் ஆடவர் அணி 3-2 என்ற கோல்கணக்கில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. 

                                  **************

வில்வித்தை

இந்தியா அதிர்ச்சி தோல்வி 

வில்வித்தை கலப்பு இரட்டையர் பிரிவில் அதிகம் எதிர்பார்த்த இந்தியாவின் தீபிகா குமாரி - பிரவீன் ஜாதவ் ஜோடி காலிறுதி ஆட்டத்தில் தென் கொரிய ஜோடியிடம் 6-2 என்ற கணக்கில் தோல்வி அடைந்து வெளியேறியது. இந்தியாவிடம் வெற்றி பெற்ற ஆன் சான் - கிம் ஜே ஜோடி நெதர்லாந்து அணியை 5-3 என்றகணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை வென்றதுஎன்பது குறிப்பிடத்தக்கது.   

                                  **************

பேட்மிண்டன் 

இந்திய அணி அசத்தல் 

ஆடவர் இரட்டையர் பிரிவின் தொடக்க சுற்று ஆட்டத் தில் இந்தியாவின் ராங்கி ரெட்டி - சிராக் ஷெட்டி ஜோடி சீன தைபேவின் யாங் - வாங் ஜோடியை 2-1 என்றகணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்று ஆட்டத்திற்கு முன்னேறியது. 

சாய் பிரணீத் அவுட் 

ஒற்றையர் பிரிவில் தொடக்க சுற்றில் இந்தியாவின் சாய் பிரணீத் இஸ்ரேலின் ஜில்பர்மான் மிஷாவிடம் 2-0 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.

                                  **************

டேபிள் டென்னிஸ் 

மகளிர் ஒற்றையர் பிரிவு

மகளிர் ஒற்றையர் பிரிவு தொடக்க சுற்று ஆட்டங்களில் இந்தியாவின் மணிகா பத்ரா, சுட்டிர்தா ஆகியோர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

இரட்டையர் பிரிவு    

இரட்டையர் பிரிவில் அதிகம் எதிர்பார்த்த  கமல் - மணிகா பத்ரா ஜோடி சீன தைபே ஜோடியிடம் வீழ்ந்து வெளியேறியது.  

;